“அவசரத்துல ஒருத்தரும் வரல.. தயவு செஞ்சு இத செய்யாத..“ மருத்துவமனையில் பார்க்க வந்த பாரதிராஜாவை எச்சரித்த சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரைப் பார்க்க வந்திருக்கிறார். சிவாஜியிடம் நலம் விசாரித்து விட்டு எப்படி இவ்வாறு நேர்ந்தது என்று  கொண்டிருக்கையில் சிவாஜி, “சாப்பிட்ட பிறகு இரண்டு மணிநேரம் தூங்குவது வழக்கம். உடன் மனைவி கமலாவும் தூங்குவார். சரியாக மாலை 4 மணிக்கு காபி போடுவதற்காக கமலா சென்று விடுவார்.

திடீரென அன்றைக்கு பார்த்து நெஞ்சு வலி வரவே நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரை அருகில் இருக்கும் மேசையில் இருக்கும். அதை வைத்து கொண்டால் நான் பிழைத்து விடுவேன் என நினைத்தேன்.

ஆனால் என்னால் அதை எழுந்து எடுக்க முடியவில்லை. அவ்வளவு தான் என்னோட கதை இன்று முடிந்து விட்டது என முடிவு செய்தேன். அந்த நேரத்தில்தான் கமலா காபியுடன் வந்து நின்றார். அதற்கு பிறகு இதோ நான் இங்கே வந்து படுத்து இருக்கிறேன்“ என சிவாஜி பாரதிராஜாவிடம் கூறியுள்ளார்.

மேலும் பாரதிராஜாவிடம் நீ வீடு கட்டிவிட்டாயா என்றும் கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஆம் என்று கூற பெரிய வீடா இல்லை சின்ன வீடா என கேட்டுள்ளார் சிவாஜி.

சேரனுக்கு கம்பேக் கொடுத்து வெற்றிக் கொடிகட்ட வைத்த முரளி… புரட்சி நாயகனுக்கு இப்படி ஒரு குணமா?

சுமாரான அளவுதான் ஏன் கேக்குறீங்க? என பாரதிராஜா சிவாஜியிடம் கேட்க அதற்கு அவர் சொன்னாராம், “இல்லை தயவு செய்து பெரிய வீடா கட்டாத. நான் பிரபு, ராம் என கத்தி கத்தி கூப்பிட்டேன். படங்களில் நான் எவ்வளவு சத்தமாக பேசுவேன் என அனைவருக்கும் தெரியும். அப்படி உரக்க கத்தி கூப்பிட்டு பார்த்தேன் ஆனால் ஒருத்தரும் வரவில்லை. அதனால வீட்டில் வாசனை வரும் அளவிற்கு, கை எட்டும் தூரத்தில் எடுக்கும் அளவிற்கு, அழைத்தால் உடன் உதவிக்கு யாராவது வரும் அளவிற்கு சிறிய அளவில் வீட்டை கட்டினால் போதுமானது“ என பாரதிராஜாவிடம் சிவாஜி அறிவுரை கூறியுள்ளார்.

எவ்வளவு வசதிகள் இருந்தாலும் அவசரத்தில் அருகில் உதவுவதற்கு ஒரு ஆள் தேவை என்பது சிவாஜிக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

Published by
John

Recent Posts