பொழுதுபோக்கு

இவர் பேர் சொல்வதும் பெருமை கொள்வதும் சினிமாவுக்கே அழகு… நடிகர் திலகத்தின் அசத்தலான ஆறு படங்கள்!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் எல்லாமே செம மாஸாகத் தான் இருக்கும். படம் எப்படி இருந்தாலும் அவருக்காகப் பார்க்கலாம். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவார். மிகைப்படுத்தாத அந்த நடிப்பைப் பார்க்கையில் கதாபாத்திரமாகவே மாறியது போல் தான் இருக்குமே தவிர அங்கு சிவாஜி என்ற நடிகர் தெரியமாட்டார். அந்த அளவு எடுத்துக் கொண்ட கேரக்டரை ரசித்து நடித்து அசத்தி விடுவார்.

அதனால் தான் மக்கள் எல்லோரும் அவரை நடிகர் திலகம் என்றும் தமிழ்த்திரை உலகின் தவப்புதல்வன் என்றும் கொண்டாடுகின்றனர். அவரது பிறந்த நாள் இன்றைய தினம் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வேளையில் அவர் நடித்த படங்களில் மறக்க முடியாதவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

படிக்காத மேதை

Padikatha methai

1960ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். கே.வி.மகாதேவனின் இசையில் காலத்தால் அழியாத பல கவித்துவமான பாடல்கள் உள்ளன.

சிவாஜி, ரங்கராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன், முத்துராமன், சௌகார் ஜானகி, கண்ணாம்பா உள்பட பலர் நடித்துள்ளனர். படித்ததினால் அறிவு, சீவி முடிச்சு சிங்காரிச்சு, எங்கிருந்தோ வந்தான், ஒரே ஒரு ஊரிலே என முத்து முத்தான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

படிக்காத பண்ணையார்

1985ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, ஒய்.ஜி.மகேந்திரன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

நெஞ்சிருக்கும் வரை

1967ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயா உள்பட பலர் நடித்துள்ளனர். முத்துக்களோ கண்கள், நெஞ்சிருக்கும், பூ முடிப்பாள் உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

அவன் தான் மனிதன்

Avan than manithan

1975ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான படம். சிவாஜி, மஞ்சுளா, ஜெயலலிதா, முத்துராமன், சோ உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மனது மறக்காத பாடல்கள் உள்ளன.

ஆட்டுவித்தால் யாரொருவர் என்ற பாடல் அப்போது வானொலிகளில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் இந்தப் படம் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதற்குக் காரணம் நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு தான்.

பாசமலர்

pasamalar

1961ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் அண்ணன், தங்கை பாசத்திற்கு அருமையான கதை அம்சத்துடன் வெளியான படம். சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்ரி, நம்பியார், எம்.என்.ராஜம், தங்கவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளில் வந்து குவிந்து படத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

விஸ்வநாதன், ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மலர்களைப் போல், எங்களுக்கும் காலம் வரும், யார் யார் யார் அவள், மயங்குகிறாள் ஒரு, மலர்ந்தும் மலராத ஆகிய மனது மறக்காத பாடல்கள் பல உள்ளன. இப்போதும் இந்தப் பாடல் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்படுகிறது.

சரஸ்வதி சபதம்

1966ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம். சிவாஜி, கே.ஆர்.விஜயா, ஜெமினிகணேசன், சிவகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் லயம். பக்திப்பரவசத்தில் ஆழ்த்தி விடும் அருமையான வசனங்கள் நிறைந்த படம்.

கல்வியா, செல்வமா, வீரமா என கலைமகள், திருமகள், மலைமகளுக்கு இடையில் கடும் போட்டி. இதில் நாரதர் வேடத்தில் வந்து கலக்கோ கலக்கு என்று சிவாஜி கலக்கி எடுத்திருப்பார். பக்கம் பக்கமாக உள்ள நீண்ட வசனத்தையும் அசால்டாகப் பேசி அசத்தி விடுவார்.

Published by
Sankar

Recent Posts