பாவ மன்னிப்பு படம் பார்த்து பாச மலர்களாக மாறிய சிவாஜி- லதா மங்கேஷ்கர்.. இப்படி ஒரு பாசமா..!

அண்ணன் – தங்கை பாசத்திற்கே எடுத்துக் காட்டாய் விளங்கி நிஜத்திலும் ஒவ்வொரு அண்ணன், தங்கையையும் கண்ணீர் விட்டு அழ வைத்த படம்தான் பாசமலர். இதில் சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நிஜ அண்ணன்-தங்கை போல் வாழ்ந்திருப்பார்கள். இதேபோல் நிஜத்திலும் தனது உடன் பிறவா தங்கைகளாக நடிகர் திலகம் பாவித்தது இருவரைத்தான். ஒருவர் ஆச்சி மனோரமா, மற்றொருவர் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

தன்னை விட ஒருவயது மட்டுமே பெரியவரான சிவாஜி தனது சகோதரி  லதா மங்கேஷ்கருக்காக சென்னையில் ஒரு குட்டி பங்களாவையே கட்டிக் கொடுத்தாராம். அந்த அளவிற்கு இவர்களின் சகோதரன்-சகோதரி பாசம் பாசமலர்களாக ஜொலித்தது.

இந்த அளவிற்கு சிவாஜிகணேசனும், லதா மங்கேஷ்கரும் பாசமலர்களாக விளங்குவதற்கு காரணம் ஒரு திரைப்படம் தான். பாசமலர் என்னும் காலத்தால் அழியாத திரைக்காவியத்தைக் கொடுத்த இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, தேவிகா நடிப்பில் 1961-ல் வெளிவந்த திரைப்படம் தான் பாவமன்னிப்பு.

சிவாஜி இஸ்லாமிய இளைஞராக நடித்துப் பெயர் வாங்கியிருந்தார். இந்தப் படத்தினை மும்பையில் உள்ள அரோரா தியேட்டரில் பாடகிகள் லதா மங்கேஷ்கரும், அவரது சகோதரியான ஆஷா போஸ்லேவும் பார்த்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தினைப் பார்த்து சிவாஜியின் நடிப்பில் மிரண்டு போனவர்கள் இடைவேளைக் காட்சியில் அழுதிருக்கிறார்கள். பின்னர் சென்னை வந்து முதல் வேளையாக நடிகர் திலகத்தினைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே சகோதரிகள் அவரை தங்களின் உடன்பிறவா அண்ணனாக ஏற்று அவரது கையில் ராக்கி கட்டி தங்களது சகோதரப் பாசத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ். கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?

பின்னர் சகோதரிகள் சிவாஜி மற்றும் ஏவிஎம் நிறுவனத்திடம் படத்தின் 16mm பிரதியை தாங்கள் நினைவுப் பரிசாக வைத்துக் கொள்ளுமாறு கேட்க அன்புடன் அவர்கள் வழங்கியிருக்கின்றனர். இப்படித்தான் சிவாஜி-லதா மங்கேஷ்கர் சகோதர உறவு ஆரம்பமாகியிருக்கிறது.

பின்னாளில் சென்னை வரும் போதெல்லாம் சிவாஜிகணேசனின் வீட்டுக்கு மறவாது செல்லும் லதா மங்கேஷ்கர், சிவாஜி மும்பை வரும் போதும் தனது இல்லத்திலேயே தங்க வைத்து உபசரித்திருக்கிறார். இதுமட்டுமன்றி தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது பாடகி லதா தன்னுடைய வீட்டில் இருந்து சிவாஜி குடும்பத்திற்கு புதுத்துணி மற்றும் பலகாரங்களையும்  அனுப்பி வைப்பாராம்.

Published by
John

Recent Posts