சித்திரை மாதம் இத்தனை சிறப்பு வாய்ந்ததா?!


சித்திரை மாத திருதியை நட்சத்திரத்தில்தான் விஷ்ணுபகவான் மச்ச அவதாரம் எடுத்தார்.அன்றைய தினத்தை மத்ஸப ஜெயந்தின்னு கொண்டாடப்படுது.  சைத்ர மகரிஷி அவதரத்ததால் இந்த மாதத்திற்கு சித்திரைன்னு பேர் உண்டானது.  அன்றைய தினத்தில் சத்யநாராயணன் மற்றும் சித்திர குப்தரை வணங்குவது விசேச பலனை தரும். 


மனிதர்களின் பாவ, புண்ணியத்துக்கேற்ப பலாபலன்களை  அளிக்க ஏதுவாக, எமனுக்கு உதவியாய் இருக்கும் சித்ரகுப்தன் அவதரித்தது இந்த மாதத்தில்.  இந்த சித்திரை மாதம் அம்மனுக்கு உகந்தது,. அதனால்,  அனேக அம்மன் கோவில்களில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்படும். இது சித்திரை மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையிலிருந்து நம்மை காக்கும்.  


சித்திரை மாத பௌர்ணமி மிகுந்த விசேசமானது. இந்நாளில் கிரிவலம் செய்வது மிகுந்த நலம் பயக்கும். திருவண்ணாமலையில், சித்தர்கள் அரூபமாய் இந்நாளில்தான் கிரிவலம் வருவதாய் சொல்லப்படுது. அந்த வருடத்தில் தவறவிட்ட கிரிவலத்தின் பலனை இந்த ஒருநாளில் கிரிவலம் வருதால் பெறலாம். சித்ராபௌர்ணமியன்று, பெண்கள் சுமங்கலி நோன்பு இருப்பதும் நலம் பயக்கும். அன்றைய நாளில், முழுநிலவு நேரத்தில்  சித்ராண்ணம் எனப்படும் புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், கற்கண்டு சாதம் மாதிரியான உணவை சேர்ந்து உண்பதால் இருவருக்குள்ளும் அன்னியோன்யம் பிறக்கும்.


சித்திரைமாத சுக்லபட்ச பஞ்சமி தினத்தில்தான் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு மகாலட்சுமி வந்ததாக சொல்லப்படுது. அன்றைய தினம் லட்சுமி பூஜையை செய்தால் செல்வச்செழிப்பு உண்டாகும்.


சித்திரை மாத பௌர்ணமியில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கும்.
இவை மட்டுமல்லாமல் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் எடுத்தும், திரௌபதி அம்மன் கோவில்களில் தீமிதி விழாவும் சிறப்புற நடக்கும்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Published by
Staff

Recent Posts