தளபதி விஜய்யின் தாய்மாமன் இப்படி ஒரு பின்னணி பாடகரா? தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய பிரபல பாடகர்

தமிழ் சினிமாவில் எஸ்.பி.பி, யேசுதாஸ், கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் என ஆண் பாடகர்கள் கொடிகட்டிப் பறந்த காலங்களில் நடுநிலையான பாடகர்களும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர். அவர்களில் தீபன் சக்கரவர்த்தி, அருண்மொழி, ஜெயச்சந்திரன் போன்ற பாடகர்களுக்கு மத்தியில் தன் பாணியில் மெல்லிசைப் பாடல்களால் இரசிகர்கள் மனதை வருடியவர் பின்னணிப் பாடகர் சுரேந்தர்.

இதெல்லாம் இவர் படிச்ச பாட்டா என்று கேட்கும் அளவிற்குப் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அதில் தளபதி விஜய்க்கு சின்னப் பையன் சின்ன பொன்ன காதலிச்சா, பூவே பூவே பெண் பூவே போன்ற பாடல்களும், என்றென்றும் காதல் படத்தில் சலக்கு சலக்கு,  ஊமை விழிகள் படத்தில் கண்மணி நில்லு, காரணம் சொல்லு,  சேது படத்தில் மாலை என் வேதனை கூடுதடி, காதலுக்கு மரியாதை படத்தில் ஆனந்த குயிலின் பாட்டு, சூர்யாவுக்கு பொள்ளாச்சி மலை ரோட்டுல மற்றும்  80-களில் வந்த சில படங்களிலும்  பாடல்களைப் பாடியிருப்பார்.

தனித்துவமும், நடுத்தரமான மென்மையும் மிக்க குரல் அவருடையது. இதனால், இசையமைப்பாளர்கள், இவரது குரலை, வெகு அரிதாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவர் ஜொலிக்காமல் போனதற்கு சில காரணங்கள் உள்ளன.

பாடல் வாய்ப்பிற்காக, இசையமைப்பாளர்களைத் தேடிச்சென்று வாய்ப்புகளை சுரேந்தர் கேட்கவில்லை.  இரண்டாவதாக நடிகர் மோகன் உள்ளிட்ட பல நடிகர்களுக்குப்,பல படங்களுக்குப் பின்னணிக்குரல் கொடுக்கும் பணியிலேயே, அவருக்கு நேரம் போதுமானதாக இருந்தது. மோகனின் பல படங்களில் அவருக்கு சுரேந்தரே டப்பிங் பேசியுள்ளார்.

அதுக்கு மட்டும் நோ சொன்ன அஜீத்..! மேடையில் செய்த சம்பவத்தால் உறைந்த உச்ச நட்சத்திரங்கள்

தவிர, தனிப்பட்ட முறையில் நிறைய இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்பார்.  ஆனால் நடிகர் மோகன், தனது வெற்றியில் கணிசமான பங்குவகித்த இவரை, எந்த விதத்திலும் சிறப்பிக்கவில்லை. இதுபோன்ற பல காரணங்களால் பாடகர் சுரேந்தர் அவர்களால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை. இவர் நடிகர் விஜய்யின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல முகங்கள் கொண்ட சுரேந்தர் அவர்களால் தொடர்ந்து சினிமாவில் ஜொலிக்கவில்லை. இருப்பினும் இவரது பாடல்கள் தனித்துவமும், மென்மையும் இருக்க இவரை தமிழ் சினிமா அரிதாகவே பயன்படுத்திக் கொண்டது என்றே கூறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...