தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?

தேனி மாவட்டம் தேவாரம் பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து இன்று தனது இசையால் அசைவற்றுக் கிடந்த மனித உணர்வுகளையும், மனங்களையும் உயிர் கொடுத்து சிலிர்க்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் பிரதர்ஸ் என்று தனது சகோதரர்களான பாஸ்கர், கங்கை அமரனுடன் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் மதுரைப் பகுதிகளில் கச்சேரிகளை நடத்தினார்கள்.

அதன்பின் சென்னைக்கு இசையமைப்பாளர் வாய்ப்புத் தேடி வந்த போது பல இடங்களில் அலைந்து திரிந்து வாய்ப்புக்காக கஷ்டப்பட்டார். மேலும் ஜி.கே.வெங்கடேஷ் போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

ராசய்யா என்ற இயற்பெயர் கொண்ட இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் அடையாங்கண்டு அன்னக்கிளியில் வாய்ப்புக் கொடுக்க முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். இன்று இளையராஜாவின் உயரம் அசைக்க முடியாதது. ஆரம்ப காலகட்டங்களில் இளையராஜாவுக்கு வலது கரமாக விளங்கியவர் அவரது சகோதரர் கங்கை அமரன். பாஸ்கர் என்ற சகோதரர் இளையராஜாவின் கால்ஷீட் நிர்வாகப் பொறுப்புகளை கவனிக்க கங்கை அமரன் இசையை கவனிக்கத் தொடங்கினார்.

தனது அண்ணன் எழுதிய பல டியூன்களுக்கு ஒலி வடிவம்கொடுத்தது கங்கை அமரனே. இவரும் பிரபல பின்னனிப் பாடகருமான மலேசியா வாசுதேவனும் நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை மலேசியா வாசுதேவனின் நண்பர் நல்ல கதை இருந்தால் கூறுங்கள் படம் எடுக்கலாம் நான் தயாரிக்கிறேன் என்று கூற, அதனை கங்கை அமரனிடம் தெரிவித்து அந்தத் தயாரிப்பாளரிடம் நீதான் இசையமைப்பாளர் என்று கூறி விடுகிறேன் என்று கூற கங்கை அமரனும் ஒப்புக் கொண்டார்.

நடிகர் கார்த்தியை சினிமாவுக்குள் இழுத்த ஹாலிவுட் படம்.. உதவி இயக்குநர் to ஹீரோ ஆனது இப்படித்தான்

மறுநாள் இச்செய்தி பத்திரிக்கைகளில் வெளிவர அதனைப் பார்த்த இளையராஜாவுக்கு தன்னிடம் சொல்லாமல் கூட தனியாக இசையமைக்க ஆரம்பித்து விட்டானே என கங்கை அமரனிடம் வருத்தம் கொண்டார்.

அதன்பின் தனியா மியூசிக் பண்ண வேண்டாம். போய் அடுத்த வேலையைப் பாரு என்று கூற, அப்போது இளையராஜாவின் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் நீ தனியாகச் சென்ற போது நான் தடுத்தேனா, அதேபோல் தான் இதுவும். கங்கை அமரன் தனியாகவே இசையமைக்கட்டும் என்று கூற, அதன்பின் கங்கை அமரன் தனியாக இசையமைக்க ஆரம்பித்தார்.

அவரது இசையில் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

Published by
John

Recent Posts