நடிகர் கார்த்தியை சினிமாவுக்குள் இழுத்த ஹாலிவுட் படம்.. உதவி இயக்குநர் to ஹீரோ ஆனது இப்படித்தான்

சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்பது எப்போது சினிமா உருவானதோ அந்தக் காலகட்டத்தில் இருந்தே வந்திருக்கிறது. எத்தனையோ நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் மீண்டும் தங்களது வாரிசுகளை அதே சினிமாத் துறையில் கால்பதிக்க வைத்திருக்கின்றனர். அதில் பெரிய வெற்றியும் பெற்றவர்கள் இருக்கின்றனர். சிலகாலம் பயணித்து முழுக்குப் போட்டவர்களும் ஏராளம்.

அந்த வகையில் நடிகர் சிவக்குமாரின் வாரிசுகளான சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாகத் திகழ்கின்றனர். சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலமாகவும், கார்த்தி பருத்திவீரனிலும் அறிமுகமாகி இன்று அண்ணன்-தம்பியாக தமிழ்சினிமாவையே கலக்கி வருகின்றனர். சூர்யா கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து அதன்பின் சினிமாவுக்கு வந்தவர்.

ஆனால் கார்த்தியோ அப்படியில்லை எம்.எஸ்.பட்டமேற்படிப்பு பயில்வதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு எம்.எஸ்.பயின்றபின் அடுத்த கோர்ஸ் படிப்பதற்காக ஒருவருட கால இடைவெளி கிடைத்திருக்கிறது. இதில் சினிமா குறித்த கோர்ஸ் ஏதாவது பயிலலாம் என எண்ணி அங்கே சினிமா கல்லூரியில் சேர்ந்து திரைப்படம் எப்படி உருவாகிறது என்பது பற்றிய படிப்பு படித்திருக்கிறார். அங்கே உலக அளவில் பிரபலமான முக்கியப் படங்களைத் திரையிடுவது வழக்கம்.

11 வருடங்களாக ரோஜாவுக்காக காத்தருந்த செல்வமணி.. இப்படி ஒரு லவ்-ஆ?

அப்படி ஒரு நாள் அக்கல்லூரியில் ஹாலிவுட் படமான CITIZEN CANE என்ற திரைப்படத்தினைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார். அந்தப் படத்தின் தாக்கத்தால் தூக்கமின்றித் தவித்தவர் சினிமாதான் நமக்கு எதிர்காலம் என எண்ணி மீண்டும் சென்னைக்குத் திரும்பி ஏதாவது இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றலாம் என்று வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்க அச்சமயத்தில் ஆய்த எழுத்து படத்திற்காக சூர்யாவின் தம்பியாக நடிக்க வைப்பதற்காக ஒருவரைத்தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது படக்குழுவினர் சூர்யாவின் தம்பியே இருக்கிறார். அவரையே நடிக்க வைக்கலாம் என எண்ணி அவரை வரவழைத்திருக்கின்றர். மணிரத்னத்தைச் சந்தித்த கார்த்தி தனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும் சினிமா கற்றுக் கொள்ள ஆசை உங்களிடம் உதவி இயக்குநர் வாய்ப்புக் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். மணிரத்னமும் உடனே யோசிக்காமல் ஓகே சொல்ல அந்தப் படம் முழுக்க உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார் கார்த்தி.

அதன்பின் அமீர் சூர்யாவுக்கு மௌம் பேசியதே படம் கொடுத்தது போல் அவரது தம்பி கார்த்திக்கும் பருத்தி வீரன் கதையைச் சொல்ல ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார் கார்த்தி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews