உடல் எடை குறைக்கும் எளிய உணவுகள்!

இன்று ‘வெயிட் லாஸ் குறைப்பு மற்றும் டயட்’ என பல ஆயிரம் கணக்கில் செலவு செய்கின்றார்கள். இதனால் உடல் எடை குறைந்தாலும் கூட சிலருக்கு பக்க விளைவுகள் உண்டாக்குகின்றது. சத்தான உணவுகளை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சத்து கிடைக்கின்றது.

  • காலையில் காபி, டீயில் பால் தவிர்த்து தேநீர் பருகலாம். வறுத்த சீரகம், இஞ்சியும் புதினாவும் சேர்த்து தேநீர் பருகினால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும். சர்க்கரை தவிர்த்து தேன் சேர்த்து கொள்ளலாம்.
  • சூடான தண்ணீரில் எலுமிச்சம் சாறை பிழிந்து தினமும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனுடன் அரை டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், தேயிலை கால் டீஸ்பூன்  ஒரு மாதம் தொடர்ந்து அருந்தினால் 2 கிலோ எடை வரை குறையும்.
  • முளைகட்டிய வெந்தியம், முளை வந்த கொண்டக்கடலை, முளை வந்த பச்சைப் பயறு, முளை வந்த கோதுமை, சோயா போன்றவற்றை சுண்டல் செய்யிது சாப்பிடலாம். காலை உணவில் ஏதேனும் முளை வந்த பயறு எடுத்து, ஒரு கப் தண்ணீருடன் பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து சாப்பிடலாம்.
  • மதிய உணவில் சாதம் தவிர்த்து பழங்கள் மற்றும் பயறுகள் சாப்பிடலாம். உடலில் இருந்து அதிகப் படியான கலோரியை எரிக்கும் ப்ரோக்கோலி, லெட்யூஸ், காலிஃபிளவர், கருவேப்பில்லை தினமும் சாப்பிட்டு வரலாம்.
  • எண்ணெய் உணவுகள், சர்க்கரை மற்றும் சமைத்த உணவுகளை தவிர்த்து, பழங்கள் சாலட்களை சாப்பிடுவதால் ஊளைச்சதை போடாது.
  • கொள்ளு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனை ரசம், கூட்டுப் பொரியல், சூப், ஜூஸ் ஆகவும் சாப்பிட்டு வரலாம்.
Published by
Staff

Recent Posts