குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்மம்- கன்னி

 

கணித்தவர்: ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள்

9629439499

ராஜபாளையம்

சிம்ம ராசி:-

எப்போதும் யாருக்கும் எப்போதும் எதற்காகவும் தலைவணங்காத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுடைய மன வருத்தங்களை நீக்க போகிறது.

படிக்கும் சிம்ம ராசி அன்பர்கள் கல்வியில் மிகச் சிறந்த மேன்மையை அடைவார்கள்.

திருமண வயதில் உள்ள சிம்ம ராசி அன்பர்களுக்கு திருமணம் நடைபெறும்.

சொந்தத் தொழில் பார்க்கும் சிம்மராசிக்காரர்கள் மிகச்சிறந்த பணப்புழக்கத்தை பெறுவார்கள்.

பல ஆண்டுகளாக கடன்களால் அவதிப்பட்டு கொண்டு இருந்தவர்களுக்கு முழுமையாக அதை தீர்க்கும் அளவுக்கு வருமான வாய்ப்புகள் உண்டாகும்.

பரிகாரம்:- தேவை இல்லை

கன்னி ராசி:-

எல்லோரையும் வசீகரிக்கும் காந்த சக்தி கொண்ட கன்னி ராசி நேயர்களே !

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நிரந்தர வருமான வாய்ப்பை வழங்கப் போகிறது.

இதுவரை இருந்து வந்த கணவன் மனைவி கசப்பு நீங்கிவிடும் .

பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் .

இந்த ஒரு வருடம் வரை எந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உங்களுக்கு காத்திருக்கிறது.

பரிகாரம்:- ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சப்தமி,அஷ்டமி,நவமி,தசமி திதி வரும் நாட்களில் உங்கள் ஊரில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று அங்கே இருக்கும் மடப்பள்ளிக்கு 5 தேங்காய்கள் தானம் செய்து வாருங்கள்.அடுத்த ஒரு ஆண்டு வரை செய்து வாருங்கள்.

அல்லது

உங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள பாழடைந்த கோவில் ஒன்றை தேர்வு செய்யவும்.அங்கே ஒரு கால பூஜை நடைபெற ஏற்பாடுகள் செய்து வர வேண்டும்.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print