லோகி கேரக்டருக்கு பொருத்தமானவர் ஷாருக்கான்!! டாம் ஹிடில்ஸ்டன்

மார்வெல் காமிக்ஸ் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் உற்சாகப்படுத்தக்கூடிய பெயர். மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களில் படித்து சிலாகித்து போன சூப்பர் ஹீரோ கதைகள் பல. காமிக்ஸிலிருந்த கேரக்டர்கள் அனைத்தையும் டிவி தொடர்கள் மூலம் மக்களை சென்றடைய செய்தது மார்வெல் ஸ்டூடியோஸ்.

காமிக்ஸில் சூப்பர் ஹீரோ கதைகளை படித்த ரசிகர் கூட்டம் டிவியில் தொடர்களாக வெளியானதும் இரு மடங்கானது. பின் டிவி தொடரிலிருந்து சினிமாவுக்கு மாறியது 90களில் வெளியான ஸ்பைடர்மேன் படங்களுக்கு பிறகு மார்வெல் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர்.

ஹல்க், அயர்ன் மேன், எக்ஸ்மேன், டெட்பூல் போன்ற பல முக்கிய காமிக் கதைகள் இருந்தன. அவை அனைத்துமே தற்போது படங்களாக வந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஹீரோ கதைகளின் தலைமை இடம் மார்வெல். அங்கு பல காமிக் கதைகள் இருந்தாலும் அதில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று லோகி.

லோகியின் கேரக்டரானது, காமெடி கலந்த வில்லத்தனமான, நல்லவனாக அமைக்கப்பட்டிருக்கும். கெட்டவன் போல இருந்து கொண்டே நல்லவனாகவும் இருக்கும் வித்தியாசமான கேரக்டர் லோகியினுடையது. வசனங்களில் நக்கலும், நையாண்டியுமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

thor

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் மூலம் தார் படங்களில் தாரின் சகோதராக வரும் லோகி. தற்போது தொடர்களாகவும் வெளிவருகிறது. முதல் சீசன் 2021ல் வெளியானது. தற்போது லோகியின் சீசன் 2 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

லோகி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வரும் டாம் ஹிடில்ஸ்டனே இந்த சீசனிலும் நடித்திருக்கிறார். ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

tomhiddleston sharukhan

ஹிந்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த டாம் ஹிடில்ஸ்டன் லோகி கேரக்டர் பாலிவுட்டில் உருவானால், என்னுடைய கதாபாத்திரத்தில் ஷாருக்கான் தான் நடிக்க வேண்டும். அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு லண்டனில் ஷாருக்கான் நடித்த தேவ்தாஸ் படத்தை பார்த்தேன். அந்தப்படம் அற்புதமான, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அதுபோன்ற படத்தை நான் இதற்கு முன்பு பார்த்தது இல்லை எனக் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews