விஜய்க்கு கால் செய்த ஷாருக்கான்… என்ன சொன்னாரு தெரியுமா?.. அட்லியின் ஓபன் டாக்…

ஒரு மனிதரின் நிறத்துக்கும் அவரது திறமைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குபவர் இயக்குனர் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் ராஜாராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார்.

அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்திற்குபின் இவர் விஜய்யை வைத்து தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார். தெறி, மெர்சல், பிகில் என பல திரைப்படங்களை இயக்கினார். இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கியவர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை காலி பண்ணப் போறது அந்த பெண் போட்டியாளரா?.. பிரதீப் சாபம் சும்மா விடாது!

ஆரம்பத்தில் இவர் சினிமாவிற்கு வரும் போது பல நெகடிவ் கமெண்ட்களையே பெற்றார். ஆனால் அவை அனைத்தையும் கண்டுகொள்ளாத அட்லீ தனது சினிமா பயணத்திலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினார். இவர் எவ்வித சினிமா பின்புலனும் இல்லாதவராம். தனது சொந்த முயற்சியினாலேயே இவர் தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

இவரின் உருவத்தை கண்டே பலபேர் இவரை கிண்டல் செய்வார்களாம். நீயெல்லாம் எங்கு படம் எடுக்க போகிறாய்… என பல பேர் பலமுறை கேலி செய்துள்ளனர். ஆனால் அவை அனைத்தயுமே இவர் தனது வெற்றிக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தினை இயக்கியிருந்தார்.

அந்தப் படத்துல பயந்து பயந்து நடிச்ச விஜய்!.. ஆனா டுவிஸ்ட் அங்க தான் இருக்கு!..

இப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. மேலும் இப்படம் அட்லிக்கு உலக அளவில் மிகப்பெரிய பெயரையும் பெற்று தந்தது. இப்படத்திற்கான கதையை ஷாருக்கானிடம் கூறும்போது அவர் அட்லியிடம் விஜய்க்கு போன் செய்யுமாறு கூறினாராம். அட்லீ இதை கேட்டதும் உடனே விஜய்க்கு கால் செய்துள்ளார்.

போனில் பேசிய விஜய்யிடம், அண்ணா.. ஷாருக்கான் சார் உங்களிடம் பேச வேண்டுமாம் என கூறியுள்ளார். உடனே விஜய் ஏண்டா என கேட்டுள்ளார். பின் போனில் பேசிய ஷாருக்கான் உங்கள் இயக்குனருக்கு நான் எவ்வித இடையூறும் கொடுக்கமாட்டேன்.. மேலும் இப்படத்தை இயக்கியபின் இவரின் பெயரரை உலகளவில் பிரபலமடைய செய்வேன் என கூறினாராம். ஆனால் அவர் சொன்னபடியே அட்லியும் இன்று உலகளவில் பிரபலமாகவும் ஆகிவிட்டார் என்பதுதான் உண்மை.

மனைவி மற்றும் மகன் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நெத்தியடி பதில் கொடுத்த தளபதி விஜய்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.