ராம் சரணின் ஜரகண்டி பாடல் அதுக்குள்ள இத்தனை மில்லியன் வியூஸா?.. தமிழ் வெர்ஷன் எப்படி இருக்கு?..

டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண் கடைசியாக ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு தன் தந்தை சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். மேலும், இன்று ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மூத்த நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் 2007ம் ஆண்டு வெளியான சிறுத்தை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆரஞ்சு, ரச்சா, நாயக், யெவடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராஜமௌளி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆர் ஆர் ஆர் படத்தில் கைகோர்த்தார்.

ராம் சரணின் ஜரகண்டி பாடல் ரிலீஸ்:

அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து ஆஸ்கர் விருது வரை வென்று வந்தது. இந்நிலையில், விரைவில் இந்த ஆண்டு கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகின்ற இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் பிஸியாக உள்ளதால் கேம் சேஞ்சர் சற்று தாமதமாகி வருகின்றது. மேலும், இந்தியன் 2 படத்தின் ரிலிஸுக்கு பிறகு விரைவில் கேம் சேஞ்சர் படமும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிப்பு மற்றும் படம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வரும் ராம் சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் ராம் சரண் டபுள் அக்ஷனில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, எஸ். ஜே, சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நாசர் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தமன் இசையில் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜரகண்டி பாடல் லிரிக் வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

ஊருக்கே கலர் அடித்த ஷங்கர்:

அரசியல் மற்றும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் ரிலிஸுக்கு ரசிகரகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் தான் அதிலும் அவர் பாடலுக்காக மெனக்கெடுவது வழக்கம். 39வது பிறந்தநாளைக் கொண்டாடும் ராம் சரணின் கேம் செஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடலின் லிரிக் விடியொ வெளியாகியுள்ளது. கியாரா அத்வானியுடன் கலர் கலர் உடையில் நடனமாடி அசத்தியிருக்கும் அந்த லிரிக் விடியோவை நடனத்துடன் பார்க்க ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தெலுங்கில் வெளியான பாடல் இதுவரை 3 மில்லியன் வியூஸ் கடந்து டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் இந்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.