பொழுதுபோக்கு

நடிகர் மயில்சாமி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்…

எஸ்..சந்திரசேகர்: மயில்சாமியை வெறும் நடிகனாக பார்க்க முடியாது மிகப்பெரிய சமூக ஆர்வலர், சிவனுடைய பக்தன், மற்றவர்களுக்கு உதவி செய்ய பணம் தேவையில்லை வசதி தேவையில்லை நல்ல மனம் தேவை என்பதை காண்பித்தவர் என்று நடிகரும் இயக்குநருமான எஸ்..சந்திரசேகர் மயில்சாமியை நினைவுகூர்ந்து பேசினார்.

அதனையடுத்து நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது: மயில்சாமி அண்ணன் இறந்தது சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ரஜினி, கமல் ஆகியோருக்கு வருத்தம் இருந்தால் நடிகர் மயில்சாமிக்கு போன் பண்ணுங்க என்று கூறி அவர் நகைச்சுவையை கேட்டு ரசிப்பார்கள்

அனைவருக்கும் உதவி செய்பவர் அவரால் முடியாத உதவி இருந்தால் அதற்கு ஏற்ற ஆட்களிடன் அழைத்துச் சென்று உதவி செய்ய செல்வார்

மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி. தினமும் காலை எனக்கு செய்தி அனுப்பி விடுவார் அதேபோன்று நேற்று எனக்கு இன்று சிவராத்திரி திருவண்ணாமலை போக முடியாது என்றும்  மேலக்கோட்டையூர் சிவன் கோவிலில்  சந்திக்கலாம் என்றார், நானும் எப்படியாவது வந்து விடுகிறேன் என்றேன்

கோவில் தொடர்பாக என்னை அழைத்தால் நான் உடனடியாக வந்து விடுவேன் ஏனென்றால் அவர் தான் என்னை திருவண்ணாமலையில் வாசிக்க வைத்தார். அதிகாலை 3 மணி வரையிலும் அவர் என்னோடு தான் இருந்தார்

என்னோட டிரம்ஸ் வாசித்து பாடலும் பாடினார், ஐந்தாம் கால பூஜைக்கு நான் திருவான்மியூர் கோவில் சென்று விட்டேன் அவரும் இன்றைய நாள் நன்றாக இருந்தது என்று வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் போட்டிருந்தார்..

அதிகாலை 5.30  மணிக்கு மீண்டும் அவரிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது ஆனால் அதை அவரது மகன் என்னிடம் மயில்சாமி மறைந்து  விட்டதாக தெரிவித்தார். கடைசியாக அவர் என்னிடம் பேசிய வார்த்தை இந்த கோவிலில் நடிகர் ரஜினி அவர் கையால்  சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை  நான் பார்க்க வேண்டும் என்றார். அவரது ஆசையும் ஆன்மாவும் சாந்தி அடையட்டும் என்று டிரம்ஸ் சிவமணி பேசினார்.

நடிகர் பார்த்திபன்:

மயில்சாமி இறப்பு சொல்ல முடியாத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது நல்ல நடிகன் ஒரு நல்ல இயக்குனராக இருப்பதை தவிர நல்ல மனிதனாக இருப்பது அவர் ஒரு பாடமாக இருந்து உள்ளர்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தவர் என்னுடைய காங்கேயன் என்கிற படத்தில் உதவி இயக்குனராக இருந்தார் ஆனால் அந்த படம் வெளியாகவில்லை அன்றிலிருந்து இதுவரை நல்ல நண்பராக இருந்துள்ளார். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்.

இந்த வருடம் மிகவும் சோகமான வருடம். திரைத்துறையைச்  சார்ந்த அனைவருக்கும் நல்ல நண்பர். நேற்று கூட டப்பிங் பேசிவிட்டு வந்திருக்கிறார் அவரது இறப்பு பயத்தை ஏற்படுத்தி உள்ளது அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஆர்.கே.செல்வமணி இரங்கல்.

Published by
Amaravathi

Recent Posts