புது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. நலம் விசாரித்த ஹர்பஜன்சிங்


604016fa0c9c908ff97d3910b61a1b76

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா இணைந்து நடிக்குக் பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்த பின் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சதீஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து சதீஷ் தனது டுவிட்டரில், ‘தமிழ்ப்புலவர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

சதீஷின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்துள்ள ஹர்பஜன் சிங் கூறியதாவது: புது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். நல்லா நெருக்கி செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews