சரும பொலிவுக்கு பாதாம் எண்ணெய்..


எண்ணெய்ன்னாலே தலைக்கு தேய்க்கவும், சமைக்கவும் மட்டுமே நமக்கு தெரியும். ஆனால், உடல் அழகுக்கும் சில எண்ணெய்கள் பயன்படுகிறது. பாதாம் எண்ணெய் முக அழகுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என பார்க்கலாம்…

தேன், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முக அழகாக மாசுமறுவற்று இருக்கும்.

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சினால் தொட்டு சருமத்தில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத்திலிருக்கும் பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம். 

உதட்டு கருமை நீங்க, தினமும் பாதாம் எண்ணெய் தடவி வரலாம். உதடு சிவப்பாக வேண்டுமென்றால் பீட்ரூட்டை வெட்டி காய வைத்து பொடியாக்கி பாதாம் எண்ணெயுடன் கலந்து உதட்டில் பூசிவர உதடு லிப்ஸ்டிக் போட்டாற்போல் இருக்கும்.

சோத்துக்கத்தாழை சாறு ஒரு டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின்மீது மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீர்கொண்டு முகத்தை அலம்பினால் அழகான, மிருதுவான சருமத்தைப் பெறலாம்.

1 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெயை சேர்த்து கலக்கி, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகம் மாசு மருவற்று இருக்கும்.

1/2டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2 ஸ்பூன் பாலின கலந்து முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முதத்திலுள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும்.

Published by
Staff

Recent Posts