சொர்ணா அக்காவா மாறினாரா சரண்யா பொன்வண்ணன்?.. பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த கொலை மிரட்டல் புகார்!..

நாயகன் படத்தின் மூலம் 1987ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். ரெட் லைட் ஏரியாவில் இருந்து காப்பாற்றி கமல்ஹாசன் தனது மனைவியாக மாற்றும் கதாபாத்திரத்தில் முதல் படத்திலேயே அசத்தியிருப்பார் சரண்யா பொன்வண்ணன்.

சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்:

மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, சிவப்புத் தாலி, அன்று பெய்த மழையில், அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக, வணக்கம் வாத்தியாரே, நான் புடிச்ச மாப்பிள்ளை, தசரதன், பசும்பொன், மீண்டும் சாவித்திரி, அருள், ராம், சிவகாசி, தவமாய் தவமிருந்து, எம் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த சரண்யா பொன்வண்ணன் அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னாடி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வந்த சரண்யா மீது தற்போது கொலை மிரட்டல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் பக்கத்து வீட்டுக்கார பெண்ணை கொன்னுடுவேன் என சரண்யா பொன்வண்ணன் மிரட்டி பேசியதாக சிசிடிவி ஆதாரத்துடன் ஸ்ரீதேவி என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தற்போது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சரண்யாவை விசாரிக்க காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பார்க்கிங் பிரச்சனை:

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் உண்மையில் பல இடங்களில் பலருக்கும் பிரச்சனைக்குரிய விஷயம் என்பதால் தான் அந்த படம் வெற்றி பெற்றது என்றும் வடிவேல் மற்றும் விஜயகாந்த்துக்கு இடையே பிரச்சினை வர காரணமும் இந்த பார்க்கிங் பிரச்சினை இருந்துள்ளது என்று கூறுகின்றனர்.

சாந்தமாக இருந்த சரண்யா பொன்வண்ணனா இப்படி சொர்ண்ணா அக்காவாக மாறிவிட்டார் என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் சரண்யா பொன்வண்ணனை ட்ரோல் செய்து வருகின்றனர். சினிமா பிரபலம் என்பதால், பக்கத்து வீட்டுக்காரர்களை மிரட்டுவது சரியான செயல் இல்லை என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...