பிறந்தநாளில் புதிய அவதாரம் எடுத்த சந்தானம்!.. வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இப்படியொரு ஸ்பெஷல் இருக்கா?

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியான டிக்கிலோனா திரைப்படம் டைம் டிராவல் கதையுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது இயக்குனருடன் மீண்டும் சந்தானம் இணைந்து நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதுவரை நடிகர் சந்தானம் எந்த ஒரு படத்திலும் பாடல் பாடாத நிலையில், முதன்முறையாக வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்காக, ஆப்ராக்கா டாப் ராக்கா பாடலை பாடி இருக்கிறார். சந்தானத்தின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் பாடல் உருவாக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

பாடகராக மாறிய சந்தானம்:

நடிகர் ஆர்யா முதல் பல திரை பிரபலங்கள் சந்தானத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இந்த முறை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவிக்கவில்லை.

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கிவிட்டதாக சந்தானம் அறிவித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தை வெளியிடுவதில் இருந்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியேறிவிட்டது. ரோமியோ பிக்சர்ஸ் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி படத்தை வெளியிட உள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தையும் திரையரங்குகளில் ரோமியோ பிக்சர்ஸ் தான் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வடக்குப்பட்டி ராமசாமி ஃபர்ஸ்ட் சிங்கிள்:

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பாடலை நடிகர் சந்தானம் தனது குரலில் பாடியுள்ளார். வல்லவன் படத்திலிருந்து நடித்து வரும் நடிகர் சந்தானம் முதல் முறையாக இந்த படத்தில் தான் தனது குரலை பதிவு செய்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி படம் எந்த மாதிரியான படம் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானத்தின் இந்த புது முயற்சியை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். கமல்ஹாசன் முதல் சிவகார்த்திகேயன் வரை பல ஹீரோக்கள் தமிழ் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் சந்தானமும் தாம் எடுத்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். வழக்கம் போல லொள்ளு சபா டீமில் இருந்து பல காமெடியன்கள் வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் நடித்துள்ளனர். கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் சொதப்பியது போல இந்த படமும் ரசிகர்களை டார்ச்சர் செய்யாமல் இருந்தாலே பெரிய விஷயம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.