கேப்டன்னா இப்படி இருக்கணும்.. அஞ்சு ஐபிஎல் சீசனா முதல் மேட்ச்ல சஞ்சு சாம்சன் செய்யும் சம்பவம்..

17வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொண்டாட்ட மோடில் தான் அவர்கள் அனைவருமே இருக்கப் போகிறார்கள். பந்து வீச்சம் பெரிய அளவில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் போவதை ஐபிஎல் போட்டிகளில் பார்க்கும் போதே ஒரு தனி உற்சாகம் பிறக்கும்.

அந்த அளவுக்கு ஒவ்வொரு போட்டி என மட்டுமில்லாமல் ஒவ்வொரு பந்தும் கூட விறுவிறுப்பாக தான் கடைசி வரை சென்று கொண்டிருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி கூட கடைசி பந்தில் தான் முடிவு தெரிய வந்தது. அந்த அளவுக்கு இறுதிவரை எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு தான் ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகள் சமீபத்திய சீசன்களில் இருந்து வருகின்றது.

அப்படி ஒரு சூழலில் தான் தற்போது மிக விறுவிறுப்பான போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி ஆடிய அவர்கள் இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்க ராகுல் மட்டும் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்துக் கொண்டிருந்தார். 60 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து லக்னோ தடுமாறிய சமயத்தில் நிக்கோலஸ் பூரான் மற்றும் ராகுல் ஆகியோர் இணைந்து நிதானமாக பார்டனர்ஷிப் அமைத்து மெல்ல மெல்ல ரன் சேர்க்கவும் தொடங்கினர்.

ஆனாலும் ராகுல் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் செல்ல, ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்த போட்டியின் மூலம் முக்கியமான ஒரு சம்பவத்தை ஐபிஎல் தொடரில் செய்து காட்டி உள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் தற்போது வரை, ராஜஸ்தான் அணி ஒவ்வொரு சீசனிலும் ஆடிய முதல் போட்டியில், ஐந்து சீசன்களாக சஞ்சு சாம்சன் அரை சதத்துக்கு மேல் அடித்து அசத்தி உள்ளார்.

அதிலும் 2021 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் அணி ஆடிய முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 119 ரன்கள் எடுத்து எடுத்து பட்டையைக் கிளப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...