சாம்சங் கேலக்ஸி Z Fold 4: மடிக்கக்கூடிய அருமையான டேப்ளட்..!

சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஆனது, ஒரு டேப்லெட் அளவிலான 7.6-இன்ச் திரையை வெளிப்படுத்த புத்தகம் போல் திறக்கும் ஒரு மடிக்கக்கூடிய டேப்ளட் ஆகும்.

சாம்சங் அதன் ஐந்தாம் தலைமுறை மடிக்கக்கூடிய இந்த டேப்ளட்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப்5 என்பது ஜூலை 26 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த நிகழ்வு தென் கொரியாவின் சியோலில் நடைபெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இரண்டு சாதனங்களும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்றும், உலகம் முழுவதும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுடன், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மற்றும் அடுத்த தலைமுறை கேலக்ஸி பட்களையும் அதே நிகழ்வில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி Z Flip5 ஆனது 6.2-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6-இன்ச் முதன்மை மடிக்கக்கூடிய திரையைக் கொண்டிருக்கும். இதேபோல், Z Fold5 ஆனது பெரிய 3.4-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.7-இன்ச் பிரைமரி டிஸ்ப்ளே ஆகியவற்றை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. இரண்டு உபகரணங்களும் Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Z Fold5 ஆனது 12 GB ரேம் மற்றும் 1 TB சேமிப்பகத்தை வழங்கும் அதே வேளையில், Z Flip5 ஆனது 8 GB RAM மற்றும் 128/256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், டேப்ளட் ஆகியவைகளின் போட்டி அதிகரித்து வருவதால், கூகுள், ஒப்போ, சியோமி மற்றும் ஹானர் போன்றவற்றுக்கு இணையாக சாம்சங் இந்த மாடலை வெளியிடவுள்ளது. எனவே, சாம்சங்கில் இருந்து வரவிருக்கும் மடிக்கக்கூடிய இந்த சாதனம், தங்கள் போட்டியாளர்களை சவாலான நிலைக்கு கொண்டு செல்லும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts