மம்மூட்டிக்கு ஜோடியான சமந்தா!.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வெளியான வீடியோ.. எப்பவுமே குயின் தான்!..

மலையாளத்தில் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டியுடன் நடிகை சமந்தா இணைந்து நடிப்பது போல் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடித்துள்ள வீடியோவும் வெளியாகியுள்ளது.

மம்மூட்டியுடன் இணைந்த சமந்தா:

விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா மையோசைட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.

மேலும், பல சிகிச்சைகளுக்கு பிறகு அந்நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா தொடர்ந்து படம் நடிக்க தொடங்கினார். ஆனால் எந்த படமும் அவர் ஏதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. எனவே அவர் மீண்டும் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து கமிட்டான படங்களின் தாயாரிப்பாளர்களிடம் தான் வாங்கிய சம்பளத்தை ஓப்படைத்துவிட்டார். அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்து விட்டது என பலரும் கமண்ட் செய்து வந்தனர்.

விளம்பரங்களில் பிஸி:

அதை தொடர்ந்து தற்போது தன் மனதை மாற்றிக்கொண்டு நடிக்க தொடங்கிய சமந்தா நேற்று நடந்த அமேசான் ப்ரைம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யாவும் கலந்துக்கொண்டார். மேலும் சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸ் அமேசான் ஓடிடியில் ரிலிசாக உள்ளது . மேடையில் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சமந்தா முயன்ற போது அவர் நோ நோ என்று சொல்லி தடுத்துவிட்டர். இதை நாக சைதன்யா அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சமந்தா மம்மூட்டியுடன் நடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. காதல் தி கோர் படத்தில் ஜோதிகா மம்மூட்டியின் ஜோடியாக நடித்தது போல் சமந்தாவும் நடிக்கவிருக்கிறாரா என கேள்விகள் எழுந்த நிலையில் அவர்கள் இருவரும் நடித்திருக்கும் விளம்பர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மம்மூட்டி ஸ்மார்ட்டாக கோர்ட் போட்டு கொண்டு சமந்தாவுடன் செஸ் ஆடுவது போல் துவங்கும் இந்த விளம்பரத்தில் இருவரும் ஐசிஎல் கோல்ட் லோனை அறிமுகப்படுதியுள்ளனர். முதலில் விளம்பரப்படங்களில் தொடங்கி பின்பு படங்களிலும் நடிப்பதை அறிவிப்பார் சமந்தா என அவரது ரசிகர்கள் ஏதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். விளம்பரப் படத்தில் நடித்த இருவரும் திரைப்படத்திலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...