பொழுதுபோக்கு

ஜெயிலர், லியோ வசூலை ஓரங்கட்டிய பிரபாஸின் சலார்!.. இத்தனை கோடி வசூலா?

பிரபாஸ் நடித்து சமீபத்தில் வெளியான சலார் சீஸ் ஃபயர்-1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் மற்றும் லியோ வசூலை முறியடித்து உள்ளது. சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட உள்ளது. முதல் பாகத்தை கேள்வி குறியாகவே முடித்துள்ளனர். இப்படத்தின் வசூல் ரூ. 630 கோடிக்கு மேல் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபாஸின் மிகப் பெரிய அளவில் வசூல் எட்டிய பாகுபலி 2 தி கன்க்ளூஷனை அடுத்து இரண்டாவதாக சலார் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் பெரும் அதிர்வு அலையை எற்படுத்தியுள்ளது.

பாகுபலி 2வுக்கு பிறகு அதிக வசூல்:

பாகுபலி 2: தி கன்க்ளூசன் படத்திற்குப் பிறகு, அடுத்தடுத்து வெளியிட்ட மூன்று படங்கள் சாஹோ, ராதே ஷியாம் மற்றும் ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. தக்க சமயத்தில் சலார் படம் பிரபாஸ்க்கு கை கொடுத்தது.

சலார் படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்வி ராஜ், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்ரும் கன்னடத்தில் பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது.

புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரபாஸ்:

இந்நிலையில் பிரபாஸ் புத்தாண்டு தினத்தன்று தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். மேலும் “கான்சாரின் தலைவிதியை நான் தீர்மானிக்கும்போது, நீங்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்து அற்புதமான புத்தாண்டைக் கொண்டாடுங்கள் அன்பே! Salaar Cease Fire ஐ ஒரு பெரிய வெற்றியாக மாற்றியதற்கும் நன்றி எனவும் தெறிவித்திருந்தார்.

சலார் தற்போது 2023ன் ஐந்தாவது பெரிய இந்தியத் திரைப்படமாகும். இருந்தாலும் , ஜவானின் ரூ. 1100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைவது கடினமானது. அட்லீ ஜவான் படத்தின் மூலம் அதிரடி சாதனையை படைத்திருந்தார்.

ஜெயிலர், லியோவை பின்னுக்குத்தள்ளியது:

சலார் படம் முழுவதும் அவரது தாயுடன் உள்ள தேவரதா கதைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நண்பரான வரத ராஜா மன்னார் தற்போதைய கான்சாரின் ஆட்சியாளர் ராஜா மன்னாரின் இரண்டாவது மனைவியின் மகன். 1000 ஆண்டுகள் பழமையான கான்சாரில் தேவாவின் தோற்றத்திற்கு இந்த படம் களம் அமைக்கிறது, அங்கு ஆளும் மன்னார் பழங்குடியினருக்கும், வரதாவின் தந்தை ஆக்கிரமித்துள்ள அரியணைக்காக சவுராங்யா மற்றும் கானியார் பழங்குடியினருக்கும் இடையே ரத்தக்களரி போர் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பாகத்தில் தான் படமே தெளிவாக புரியும் என்கிற நிலையிலும், பிரபாஸின் மாஸ் ஆக்‌ஷனை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டனர்.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படம் 625 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வமாக 545 கோடி வரை தான் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

அதே போல நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் படம் 525 கோடி வசூல் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்த வசூல் 607 கோடி என சொல்லப்படுகிறது. இந்த இரு தென்னிந்திய படங்களின் வசூலையும் சலார் முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

Published by
Sarath

Recent Posts