ஆன்மீகம்

சபரிமலையில் நாளை மண்டல பூஜை

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பர் இந்த காலங்களில் அய்யப்ப பக்தர்கள் சுத்தமாக விரதம் இருந்து இல்லறம் தவிர்த்து மது, மாது போன்றவற்றை அறவே தவிர்த்து விரதம் இருப்பர்.

அய்யப்ப பூஜையின் விரதம் தொடங்கி 45 நாள் ஆனவுடன் அது மண்டல பூஜையாக கொண்டாடப்படும் . 1 மண்டலம் விரதம் இருப்பதுதான் அய்யப்ப பூஜையின் முக்கிய அம்சம் ஆகும்.

அந்த 1 மண்டல விரதம் என்பது 45 நாட்களை குறிக்கும் அந்த 45 நாட்கள் விரதத்தை வெற்றிகரமாக இருந்த பிறகு அய்யப்ப பக்தர்களால் மண்டல பூஜை நடத்தப்படுகிறது.

சபரிமலை மட்டுமல்லாமல் எங்கும் இருக்கும் அய்யப்பன் கோவில்கள் அனைத்திலும் மண்டல பூஜை கொண்டாடப்படுகிறது. மண்டல பூஜை அன்று அய்யப்பனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெறுவது வழக்கம்.

Published by
Abiram A

Recent Posts