காதலர் தினத்திற்கு அடுத்த நாளில் திருமணம் முடித்த பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்துக்கள்

சாட்டை படத்தை இன்றைய 2K கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். அரசுப் பள்ளியின் அவல நிலையையும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மெத்தனப் போக்கையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய படைப்பு அது. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்த இப்படத்தில் மாணவராக வந்து அடி ராங்கி.. என் ராங்கி.. என டூயட் பாடியவர் தான் நடிகர் யுவன்.

இயக்குநரும், நடிகருமான ஃபெரோஸ் கானின் மகனான யுவன் தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இருந்தபோதிலும் அவருக்கு சாட்டை படமே குறிப்பிடும் படியான அடையாளத்தினைக் கொடுத்தது.

சாட்டை படத்தைத் தொடர்ந்து, இவர் நடிப்பில் கீரிப்பிள்ளை, காதலை தவிர வேறோன்றுமில்லை, கமரக்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், கடைசியாக வெளியான அடுத்த சாட்டை என 10 படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி உள்ளன. ஆனால் சாட்டை தவிர எந்தப் படமும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் படியாக வரவேற்பைக் கொடுக்கவில்லை. இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஒருபடம் நடிப்பதாக வாய்ப்பு வந்து பின்னர் அப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இவர் தனியாக ஹோட்டல் ஆரம்பித்து புரோட்டா மாஸ்டராக இவர் பணிபுரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக ஒரு சுபகாரியத்தை நடத்தி முடித்திருக்கிறார் நடிகர் யுவன். காதலர் தினத்திற்கு மறுநாள் பிப்.15-ல் சென்னையில் தனது திருமணத்தை கோலாலகலமாக நடத்தியுள்ளார்.

இந்தப் ஹிட் பாட்டெல்லாம் இவர் எழுதியதா? யாரும் அறியாத பிரபல கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்

நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நேற்று கோலாமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரமாண்டமான மேடை அமைத்து அதில் திரளான விருந்தினர்கள் முன்னணியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், அரசியல் பிரமுகர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விஜிபி அதிபர் சந்தோசம், கிளாரியன் பிரஸிடென்ட் ஹோட்டல் அதிபர் அபூபக்கர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மன்சூர் அலிகான், ரியாஸ்கான், உமா ரியாஸ்கான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, மிஸ் இந்தியா சினேகா மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கான், ரமீசா கஹானி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.