கோலி, ரோஹித் இணைந்து ஒரே ஐபிஎல் தொடரில் செஞ்ச முதல் சாதனை.. உற்சாக மோடிற்கே போன ரசிகர்கள்..

இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலுமே அணியின் தூணாக இருந்து வருபவர்கள் தான் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர். இவர்கள் இருவரும் கேப்டனாக ஆனதன் பின்னால் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றது கிடையாது. பலமுறை இவர்கள் இருவரும் அணியில் ஆடும் போது, ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் முன்னேறி இருந்தாலும் கூட அதனை கோப்பையை கைப்பற்றும் ரூட்டாக மாற்றுவதற்கான வழிகளில் தடுமாற்றம் இருந்ததால் தோல்வி அடைந்திருந்தனர்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் நிச்சயம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை ரசிகர்களுக்காக வென்று சாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதற்கு ரோஹித் மற்றும் கோலி ஆகிய இரண்டு பேரின் பங்கும் அதிகமாக இருக்கும் என்றும் ஒரு பக்கம் ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் சூழலில், சமீபத்தில் அவர்கள் மீதான விமர்சனமும் அதிகமாக இருந்தது. இதற்குக் காரணம் டி 20 போட்டிகள் என வந்துவிட்டால் இளம் வீரர்கள் அதிகமாக அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கும் சூழலில், சீனியர் வீரர்களான இவர்கள் டி20 உலக கோப்பைத் தொடரில் ஆட வேண்டாம் என்றும் அவர்களுக்கு பதிலாக இளைஞர்களை அணியில் சேர்த்தால் நிச்சயம் அது டி 20 உலக கோப்பையில் நிச்சயம் பலன் கொடுக்கும் என்றும் பலரும் குறிப்பிட்டு வந்தனர்.

ஆனால் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கு போட்டி கொடுக்கும் அளவிற்கான பேட்டிங்கை கோலி மற்றும் ரோகித் ஆகியோர் வெளிப்படுத்தியுள்ள சூழலில் இவர்கள் இரண்டு பேருமே நடப்பு ஐபிஎல் சீசனில் சதமடித்து அசத்தி உள்ளனர். இதனால், டி 20 தொடரிலும் அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதுடன் தங்களால் குறைந்த ஓவர் போட்டிகளில் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க முடியாது என எழுந்த விமர்சனத்தையும் அடித்து தூள் தூளாக்கி உள்ளனர்.

அப்படி இருக்கையில், ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இணைந்து ஆடிய சமயத்தில் முதல் முறையாக ஒரு அரிதான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி 8 முறையும், ரோஹித் ஷர்மா 2 முறையும் சதமடித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் இரண்டு பேரும் இணைந்து ஒரே ஐபிஎல் தொடரில் சதமடித்துள்ள சம்பவம் இந்த முறை தான் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...