இரண்டு ஜாம்பவான்கள் மட்டும் இருக்குற லிஸ்ட்.. தோனிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ரோஹித் தொட்ட உயரம்..

17 வது ஐபிஎல் சீசன் தற்போது தான் மிகவும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்றே சொல்லலாம். ஏறக்குறைய அனைத்து அணிகளுமே பாதி லீக் போட்டிகளை ஆடி முடித்துள்ள நிலையில் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக அனைவரும் ஆடும் பட்சத்தில் தான் பிளே ஆப் சுற்றை நெருங்க முடியும் என்ற ஒரு நிலையும் உள்ளது.

அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு அணியும் தங்களின் முழு திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கும் போது, போட்டிக்கு நடுவே அனல் பறக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை. அதிலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடி இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவி இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னை அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்த அவர்கள் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடி வருகின்றனர். ரோஹித்திற்கு பதிலாக ஹர்திக் புதிய கேப்டனாக மாறி இருந்தாலும் எந்த மைதானத்தில் மும்பை அணி ஆட உள்ளே வந்தாலும் ரோஹித் என்று தான் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அவருக்கான ஆதரவும் அதிகமாக இருக்கும் சூழலில் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மற்ற அனைத்து வீரர்களும் இலக்கை நோக்கி ஆடிய போது அவுட்டாகி இருந்தாலும் தனி ஆளாக மாஸ் காட்டி இருந்த ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தையும் அடித்து இருந்தார். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித்திற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி, ஐபிஎல் தொடரின் 250 வது போட்டியாகவும் மாறி உள்ளது.

ஐபிஎல் தொடர் போட்டிகளில் பல முக்கியமான சாதனைகளை அடித்து நொறுக்கி தன்வசம் ஆக்கி உள்ள ரோகித் சர்மா, தற்போது மிகச் சிறப்பான மற்றொரு மைல்கல்லையும் எட்டி உள்ளார். இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் 250 வது போட்டியை ஆடும் இரண்டாவது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் ரோஹித் ஷர்மா. இதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி 250 போட்டிகளை ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள நிலையில் அவருக்கு அடுத்தபடியாக தற்போது ரோஹித் ஷர்மா இந்த உயரத்தை எட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 249 போட்டிகளிலும், விராட் கோலி 244 ஐபிஎல் போட்டிகளிலும் ஆடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...