ரிஷபம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

நவம்பர் மாதத்தின் முதல் பாகத்தினைப் பொறுத்தவரை கேதுவானது சுக்கிரன், சூர்யன், புதன், செவ்வாய் என அனைத்து கிரகங்களுடன் சேர்ந்தே இருக்கும்.  வேலைவாய்ப்புரீதியாக பெரிதளவில் பிரச்சினைகள் இருக்காது; சுமுகமாகச் செல்லும்.

தொழில்ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் செல்லும்.

நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய்- சுக்கிரன் நேர்கோட்டில் இருக்கும், சூர்யன், சுக்கிரன் மற்றும் புதன் இணைவு நற்பலன்களைக் கொடுக்கும். உடல் நலத்தினைப் பொறுத்தவரை கூடுதல் அக்கறையுடன் இருத்தல் வேண்டும்.

திருமண காரியத்தைப் பொறுத்தவரையில் நவம்பர் மாத இரண்டாம் பாதியில் வரன் கைகூடும் காலமாக இருக்கும். வண்டி, வாகனங்கள் வாங்குதல் என்பதுபோன்ற சுப செலவுகள் வீட்டில் ஏற்படும்.

கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணை ரீதியாக தேவையான உதவிகள் கிடைக்கும். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள்.

வீடு கட்டுதல், வீடு புதுப்பிக்கும் வேலை செய்தல் என்பது போன்ற சுப காரியங்கள் கைகூடிவரும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்தநிலை நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

நீண்ட காலம் சந்தித்திராத நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பீர்கள். பூர்விகச் சொத்துகள் பாகப்பிரிவினை செய்ய ஏற்ற காலமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.