ரிஷபம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

ரிஷப ராசி ரிஷப லக்னத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த காலகட்டமாகும். குரு பகவான் 11 ஆம் இடத்திலும் சனி பகவான் மகரத்திலும் இருப்பதால் ராகு – கேது 12 ஆம் மற்றும் 6 ஆம் இடத்திலும் இருப்பதால் அனுகூலம் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும்.

வேலைரீதியாக தற்போது இருக்கும் வேலையில் பாராட்டுகள் கிடைக்கப் பெறும், புதிதாக வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கப் பெறும்.

புதன் 10 ஆம் தேதிவரை உச்சத்தில் இருப்பதால் தொழில்ரீதியாக தொய்வுகள் இல்லாத மாதமாக இருக்கும், புதன் 11 ஆம் தேதிக்குப் பின் வக்கிரம் அடைந்தாலும் தொழில்ரீதியாக ஆதாயங்கள் கிடைக்கப் பெறும்.

நீங்கள் பல மாதங்களாக நிறைவேறாமல் காத்திருந்த விஷயங்கள் இனி நடக்கப் பெறும். திருமணம் சார்ந்த காரியங்களுக்காக எதிர்பார்த்து இருப்போருக்கு வரன்கள் கைமேல் கிடைக்கப் பெறும், விறுவிறுவென திருமண ஏற்பாடுகள் நடக்கப் பெறும்.

காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது கணவன் – மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும், சூரியன் 4 ஆம் இடத்தில் இருப்பதால் வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டமாக இருக்கும்.

மேலும் வீடு சார்ந்த புதுப்பித்தல் வேலைகள் நடக்கப் பெறும். மேலும் நீண்டநாட்களாக நீங்க வாங்க நினைத்திருந்த வீட்டிற்குத் தேவையான புது பொருட்கள் வாங்குவீர்கள்.

சகோதரர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும் மாதமாக உள்ளது. சனி வக்கிரம் அடைந்து இருப்பதால் மாணவர்கள் கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.