ரிஷபம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்; தவறான முதலீடுகளைச் செய்துவிட்டு பின்னர் வருத்தப்படும் சூழல் ஏற்படும்.

மனை வாங்குதல், வண்டி- வாகனம் வாங்குதல் போன்ற விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். மேலும் உடல் ஆரோக்கியம் என்று எடுத்துக் கொண்டால் அடிவயிறு சம்பந்தப்பட்ட உடல் தொந்தரவுகள் இருக்கும்.

வெளியூர், வெளிநாடுகளுக்கு உத்தியோகம் நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். இருக்கும் வேலையினை விட்டுவிட்டு புது வேலையினைத் தேடாமல் வேலையில் இருக்கும்போதே புது வேலைக்கு முயற்சிக்கவும்.

பழைய கடன்களைக் குறைப்பதற்கான அனுகூலமான விஷயங்கள் ஏற்படும். வழக்கு போன்ற விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

நண்பர்கள்- உறவினர்கள் இடையேயான மனக் கசப்புகள் சரியாகி உறவில் அன்பு மேம்படும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும். வெளியூர்ப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும்.

கூட்டுத் தொழிலில் இருப்போர் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த மாற்றங்கள் நடந்தேறும். நரசிம்மர் வழிபாடு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.