ஜோதிடம்

ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதமானது உங்களுக்குச் சுப செலவுகள் நிறைந்த மாதமாக இருக்கும். சனி பகவான் 10 ஆம் இடத்தில் வக்ரம் அடைந்துள்ளார்; வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் நினைக்கும் விஷயங்கள் நடந்தேறும்; ஆனால் சிறு சிறு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

பொருளாதாரரீதியாக சிறப்பான பணப் புழக்கம் இருக்கும்; ஆனால் செலவினங்கள் மற்றொருபுறம் மிகவும் அதிகமாகவே இருக்கும். தொழில்ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும்; தொழில்ரீதியாக சிறு சிறு முதலீடுகளைச் செய்வீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுக்கிரன்- புதன்- சூர்யன் 4 ஆம் இடத்தில் உள்ளனர். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அவை உடனுக்குடன் சரியாகும்.

தேவையில்லாத விஷயங்கள் குறித்து யோசித்தல், தேவையில்லாத விஷயங்களில் தலையீடு போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது. திருமண வாழ்க்கையினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த வரன் கைகூடும்.

மாணவர்களைப் பொறுத்தவரை ஆதித்ய யோகம் நிறைந்து இருப்பர்; நீங்கள் தீட்டும் தீட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவீர்கள். குழந்தைகளால் பெற்றோருக்குச் செலவினங்கள் ஏற்படும்; இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை டென்சன் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியம் என்று எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் உடல் தொந்தரவுகள் எதுவும் இல்லை.

Published by
Gayathri A

Recent Posts