ரிஷபம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை ராசிநாதன் சுக்கிரன் ஏப்ரல் 6 ஆம் தேதி ராசிக்குள் இடப் பெயர்வு ஆகின்றார். 2 ஆம் இடத்தில் செவ்வாய், 12 ஆம் இடத்தில் குரு பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது. புதன், சூர்யன் என இரண்டு கோள்களும் 12 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து குருவுடன் கூட்டணி அமைக்கின்றன.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலை தேடுவோருக்கு பெரிய அளவில் அலைச்சல் இருக்கும். வேலை மாற்றத்திற்கு முயற்சிப்போர் தற்போதைக்கு இருக்கும் வேலையினைத் தக்கவைத்துக் கொள்தல் நல்லது.

தொழில்ரீதியாக சில தாமதங்கள் ஏற்படும். புது முதலீடுகள் அல்லது அபிவிருத்தி சார்ந்த விஷயங்கள் எதையும் செய்யாமல் இருத்தல் நல்லது. நிதானித்துச் செயல்படுதல் நல்லது.

பொருளாதாரரீதியாக செலவினங்கள் அதிக அளவில் ஏற்படும், முடிந்தளவு சுப செலவுகளாகச் செய்து விடுங்கள். ஏப்ரல் முதல் பாதியில் தானம் ஏதேனும் செய்துவிட்டால், விரயச் செலவுகள் சுப செலவுகளாக மாறும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் காரசாரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை மன உளைச்சல், அலைச்சல் என பிரச்சினைகள் கொண்டதாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை குழப்பங்கள் நிறைந்து காணப்படுவர். குல தெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருதல் நல்லது.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை பழைய பொருட்களை மாற்றிப் புதுப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எனினும் திட்டமிட்டதைவிட செலவு கைமீறிப் போகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews