அனைத்து வீட்டு விசேஷங்களிலும் கட்டாயம் இடம் பெறும் காப்பரிசி…! செய்வது எப்படி?

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விசேஷங்கள் முடிந்த பின்பு வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு தாம்பூலப்பை கொடுத்து சிறப்பித்து அனுப்புவார்கள். அந்த தாம்பூல பையில் வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், வாழைப்பழம், தேங்காய் இவற்றோடு கட்டாயம் காப்பரிசி இடம்பெற்றிருக்கும்.

குழந்தை பிறந்து அந்தக் குழந்தைக்கு புண்ணியதானம் செய்து பெயர் வைக்கும் நாள் அன்று கட்டாயம் வீட்டில் காப்பரிசி செய்வார்கள். புண்ணியதானம் மட்டும் இல்லாமல் வளைகாப்பு தாலிப் பெருக்கு, காதணி விழா போன்ற அனைத்து விழாக்களிலும் இந்த காப்பரிசி கட்டாயம் இடம் பெறும். சில இடங்களில் வீடு கட்ட துவங்கும் பொழுது நடைபெறும் மனை போடும் பூஜை  அன்றும் காப்பரிசி செய்து அனைவருக்கும் வழங்குவர். விசேஷ நாட்களில் வீட்டில் பூஜை செய்து இறைவனை வணங்க விரும்புவோர் இந்தக் காப்பரிசியை செய்து இறைவனுக்கு படைத்து நெய்வேத்தியம் செய்து வழிபடுவர்.

உங்கள் வீட்டில் அனைத்து வளங்களும் பெருக ஆடிப்பெருக்கு அன்று இவ்வாறு பூஜை செய்யுங்கள்!

kapparisi 2

இப்படி அனைத்து விசேஷங்களிலும் முக்கிய இடம் பிடிக்கும் இந்த காப்பரிசியை செய்வது எப்படி?

காப்பரிசி செய்ய தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி ஒரு – கப்
  • வெல்லம் – முக்கால் கப்
  • பொட்டுக்கடலை – அரை கப்
  • தேங்காய் (சிறிய பல்லாக நறுக்கியது) – இரண்டு ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • நெய் – தேவையான அளவு
காப்பரிசி செய்யும் முறை:

kapparisi 1

பச்சரிசியை நன்கு தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். அதிக நேரம் தண்ணீரில் ஊற விடக் கூடாது.

கழுவிய பச்சரிசியை ஒரு வெள்ளை துணியில் வைத்து காய வைக்க வேண்டும்.

பச்சரிசி ஈரம் உலர்ந்து நன்கு காய்ந்ததும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து உலர்த்திய பச்சரிசியை நன்கு சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும். சிவந்து பொறியும் பொழுது அரை ஸ்பூன் நெய் விட்டு அரிசியை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி சிவந்து பொரிந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தேங்காய் பற்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளத்தை தூளாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டி வாணலியில் சேர்த்து பாகு வரும் வரை கிளற வேண்டும்.

வெல்லம் கெட்டியாகி விடக்கூடாது வெள்ளத்தின் பாகினை எடுத்து தண்ணீரில் போட்டால் அது உருண்டு வரும் இதுதான் சரியான பதம்.

இப்பொழுது இதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து பின் வறுத்து வைத்த அரிசியையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை கிளற வேண்டும்.

பின் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கிளறினால் பாகு முழுமையும் அரிசியில் உறைந்திருக்கும் கைகளில் ஒட்டாது. அரிசி உதிரி உதிரியாக இருக்கும்.

அவ்வளவுதான் காப்பரிசி இப்பொழுது தயார்…!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews