கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சல்… காரணம் மற்றும் தீர்வுகள்!

கர்ப்ப காலத்தில் கால்களில் வீக்கம் ஏற்படுவது, காலை நேர உபாதைகள் உண்டாவது போன்ற சில தொந்தரவுகளை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் அஜீரண தொந்தரவு, நெஞ்செரிச்சல் இதெல்லாம் எதனால் ஏற்படுகிறது? என்பதை பற்றி குழப்பம் ஏற்படலாம். இது பொதுவானதா? இல்லை நீங்கள் உண்ணும் உணவில் ஏதேனும் பிரச்சனையா? என்றெல்லாம் கவலை கொள்ள வேண்டாம். எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்தால் பிறகு எளிதாக இந்த நெஞ்செரிச்சலை சமாளிக்கலாம்.

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறு என்பது இரப்பைக்கும் தொண்டைக்கும் நடுவில் உள்ள உணவுக் குழலின் வழியாக ஏற்படுகிறது. இதனை சிலர் புளித்த ஏப்பம் வருகிறது என்றும் கூறுவார்கள்.  வயிறு சற்று உப்பி இருப்பதைப் போல தெரியும். வாய் முழுமையுமே புளிப்பது போன்று இருக்கும்.

கர்ப்ப காலத்தில் 45 சதவிகித பெண்கள் இந்த நெஞ்செரிச்சலை உணர்கிறார்கள். இந்த நெஞ்செரிச்சல் எதனால் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.

அதிகரிக்கும் கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான காரணங்கள் மற்றும் உணவு முறைகள்…!

நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும் காரணிகள்:

heartburn 1

1. புரோஜெஸ்டிரோன் எனப்படும்  ஹார்மோன் கர்ப்ப காலத்தில் அதிகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் கர்ப்ப காலத்தில் தசைகளை தளர்வாக வைத்திருக்க உதவுகிறது. உணவுப் பொருட்கள் உணவு குழாயின் வழி செல்லும் போது இது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைக்கும், உணவு குழாய்க்கும் இடையே ஏற்படுத்தும் மாற்றத்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் தொண்டையை நோக்கி வந்து நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

2. கர்ப்பப்பையில் குழந்தை வளர வளர கர்ப்பப்பை விரிவடைகிறது இது வயிற்றில் உள்ள மற்ற பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது எனவே உணவு குழாயில் அழுத்தம் கொடுக்கும் பொழுது அந்த வயிற்றுப் பகுதியில் சுரக்கும் அமிலம் மேல்நோக்கி வந்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

3. வயிற்றுப் பகுதியில் ஏற்படும் மாற்றத்தால் செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும். இதனால் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருப்பது போல் தோன்றும்  இதன் காரணமாகவும் அஜீரண பிரச்சனை ஏற்படலாம்.

நெஞ்செரிச்சலை சமாளிக்கும் வழிமுறைகள்:

heartburn 3

1. உண்ணும் உணவில் கவனம்:

நெஞ்செரிச்சல் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் பொதுவானது என்றாலும் அதிக கார உணவுகளை கொண்டால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். அதனால் கார உணவுகள் கொழுப்பு நிறைந்த உணவுகள் அமிலம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2. உணவை சிறிய அளவில் பிரித்தல்:

மூன்று வேளை உண்ணுவதை ஆறு வேளையாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாய் உணவினை எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

3. நிமிர்ந்து அமர்தல்:

உணவு உண்ணும் பொழுது நேராக நிமிர்ந்து அமருங்கள். ஈர்ப்பு விசை நிச்சயம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி செய்யும்.

கர்ப்ப காலத்தில் மசக்கை என்று சொல்லக் கூடிய காலை நேர உபாதைகள்… காரணங்கள் மற்றும் குறைக்கும் வழிமுறைகள்!

4. இரவு உணவு:

உறங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே இரவு உணவினை முடித்து விடுங்கள் அதற்கு இடையில் உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

5. தலையணை

தலையணை குறைந்த பட்சம் 6 இன்ச்கள் இருக்கும் படி வைத்துக் கொள்ளுங்கள் தலையை சற்று தூக்கி வைத்தார் படி இருந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஓரளவு குறைக்கலாம்.

heartburn 2

6. தளர்வான ஆடைகள்:

வயிற்றுப் பகுதியை இறுக்கிப்பிடிக்கும்படி ஆடைகள் அணியாமல் சற்று தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுதல் நல்லது.

மேலும் இவற்றோடு மற்றொன்றையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் உணவை உண்டு முடித்த பின்பு பழச்சாறு அல்லது நீர் அருந்துங்கள் உணவை சாப்பிட்டுக் கொண்டே எந்தவித நீர் ஆகாரங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews