ஆன்மீகம்

5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடை

இந்தியாவின் தேசிய புண்ணியஸ்தலமாக இருப்பது இராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். முன்னோர்களுக்கு பரிகாரம் செய்யும் ஸ்தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளது.

இங்கு அமாவாசை என்றாலே விசேஷம்தான் அதிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை என்றால் இந்தியா முழுவதும் இருந்து கூட்டம் வரும்.

இந்த வருடம் மஹாளய அமாவாசை வரும் 6ம் தேதி வருவதால் கொரோனா தொற்று காரணமாக அதிக கூட்டம் திரளும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவிலை அடைக்கவும் பக்தர்கள் நீராடவும் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தடை உத்தரவு விதித்துள்ளார்.

அதனால் மஹாளய அமாவாசைக்கு ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் வீண் அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு பயணத்தை ஒத்தி வைப்பது சிறந்தது.

Published by
Abiram A

Recent Posts