கனடாவில் புது வீடு கட்டினாரா ரம்பா?.. அவரோட மூத்த மகளை பார்த்தீங்களா.. எப்படி வளர்ந்துட்டாரு!..

நடிகை ரம்பா தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் பூஜை செய்த புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

பல படங்களில் நடித்து வந்த ரம்பா விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தார். தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரம்பா கனடாவில் வாழ்ந்து வருகிறார். மேலும், ரம்பாவுக்கு சாஷா பத்மநாபன், லாவண்யா பத்மநாபன் என இரு மகள்களும் ஷிவின் என ஒரு மகனும் உள்ளனர். என்னதான் ரம்பா கனடாவில் வசித்து வந்தாலும் இந்திய பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்.

ரம்பா வீட்டில் பூஜை:

சமீபத்தில் அவர் வெளிநாட்டில் உள்ள வீட்டில் நடத்திய பூஜையில் எடுத்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மாவை போலவே ரம்பாவின் மூத்த மகள் அச்சு அசல் அப்படியே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரம்பாவின் மூத்த மகள் ரம்பாவை விட ஹைட்டாகவே வளர்ந்து விட்டார். பார்ப்பதற்கும் ரம்பா போலவே உள்ளார். எனவே, நடிகை ரம்பா சமீபத்தில் சென்னைக்கு வந்த போது தன்னை போலவே தனது மகளையும் ஹீரோயின் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ரம்பா மூத்த மகள்: 

ரம்பா சென்னையில் இருந்த போது அளித்த பேட்டியில் தன்னிடம் ரஜினிகாந்த் அருணாச்சலம் படப்பிடிப்பின் போது நடந்து கொண்ட விதத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார். அதில் ஒரு காட்சியில் திடீரென லைட் ஆஃப் செய்யப்பட்டு யாரோ என் முதுகில் தட்டியது போல் இருந்தது. பயந்து கத்திவிட்டேன் பின்னர் தான் அது ரஜினி சார் செய்தார் என தெரிந்துக் கொண்டேன். பின்னர், சல்மான் கானை பார்த்ததும் கட்டிப் பிடித்த என்னை ரஜினிகாந்த் வெறுப்பேற்றி அழ வைத்து விட்டார் என ரம்பா பேசியது பெரும் சர்சையை எற்படுத்தியுள்ளது.

தனது 47 வயதில் ரம்பா தற்போது வெளிநாட்டில் தனது கணவருடனும் மற்றும் மூன்று குழந்தைகளுடனும் புது வீட்டில் பூஜை நடத்தி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளன. குடும்பத்துடன் செம ஹேப்பியாக வீட்டில் நடைபெற்ற பூஜையில் இந்திய பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு இருந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகை ரம்பா கனடாவில் இன்னொரு புதிய வீட்டை கட்டிவிட்டாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.