பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. 3 படங்களுக்கு பின் 20 வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை!

பாரதிராஜா படத்தில் அறிமுகம் கிடைத்த போதிலும் சுமார் 20 ஆண்டுகள் வரை திரை பயணத்தில் இருந்து ஒதுங்கி இருந்து பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள நடிகையை பற்றி இந்த செய்தியில் காணலாம்.

நடிகை ரமா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவர் அரசு வேலையில் இருந்த நிலையில் தான் அவருக்கு திடீரென பாரதிராஜாவின் ’என்னுயிர் தோழன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சாந்தி என்ற இயற்பெயரை ரமா என பாரதிராஜா மாற்றிய நிலையில் என்னுயிர் தோழன் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் அதற்கடுத்து அவர் ’லேடிஸ் ஹாஸ்டல்’ உள்பட இரண்டு படங்கள் நடித்தார். அந்த இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை ரமா.
rama

கிட்டத்தட்ட 20 வருடங்கள் அவர் திரையுலகம் பக்கமே வரவில்லை. அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு தான் அவர் பெயர் தமிழரசி என்ற படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு அம்மா வேடம் கிடைக்க ஆரம்பித்தது.

விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாகவும் நடித்தார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த ’பொறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்தார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிகை ரமா நடித்திருந்தார்.

இதன் பின்னர் கூட்டத்தில் ஒருவன், குரங்கு பொம்மை, கனா ஆகிய படங்களில் நடித்த ரமா, சிவகார்த்திகேயனின் ‘கனா’ திரைப்படத்தில் அவர் ஐஸ்வர்யாவின் அம்மாவாக சூப்பராக நடித்திருப்பார். மேலும் வெப் தொடர் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வரும் ரமாவுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த கதாபாத்திரம் என்றால் மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்தது தான்.

அந்த படத்தின் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்புத் திறனை ரமா வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் தொடர்ந்து பல அசாத்திய கதாபாத்திரங்களும் வர ஆரம்பித்திருந்தது. இதன் காரணமாக பிஸியாகவும் அவர் பல படங்களில் நடித்து வந்த வண்ணம் உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.