ரஜினிக்கும் கேமியோவுக்கும் ராசியே இல்லை போல!.. வசூலில் பயங்கர அடிவாங்கிய லால் சலாம்!..

தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆசைக்காக நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் கேமியோவாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்தால் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை.

வள்ளி, குசேலன் படங்களை தொடர்ந்து லால் சலாம் திரைப்படமும் வசூலில் பயங்கர அடி வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேமியோ ரோலில் ரஜினிகாந்த்:

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் மூலம் மோதினர். அந்த இரு படங்களுமே 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. நான் அதுவே படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இரண்டு படங்களும் தோல்வி படங்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அதைவிட மோசமாக ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த லால் சலாம் திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் காதலர் தினத்துடன் சேர்த்து வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டி இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வசூலில் படுதோல்வி:

லால் சலாம் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளமே 40 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியான நிலையில், வெறும் 15 கோடி மட்டுமே இதுவரை அந்த படம் வசூல் செய்திருப்பது லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர். விஷ்ணு விஷால் மட்டுமே 8 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வரும் நிலையில், லால் சலாம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டிலாவது குறைந்தது உருவாக்கப்பட்டிருக்கும் என்றும் அந்த அளவுக்கு லாபம் வர வாய்ப்பே இல்லை என்றும் இந்த படம் மிகப்பெரிய டிசாஸ்டர் என்று சோலியை முடித்துள்ளனர்.

மேலும், லால் சலாம் திரைப்படம் இதுவரை எந்த ஒரு ஓடிடிக்கும் விற்பனை ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பெயரை வைத்து முன்பாகவே பெரிய நிறுவனத்துக்கு விற்று விடலாம் என லைகா நிறுவனம் திட்டம் போட்டாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாத நிலையில், படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு வாங்க ஓடிடி நிறுவனங்கள் முடிவெடுத்த நிலையில், தற்போது அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வருவதாக கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.