ரஜினியின் ஜெயிலர் படம் ப்ரீ புக்கிங்கில் செய்த புதிய சாதனை! வாயை பிளக்கும் அப்டேட்!

ரஜினியின் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் மற்றும் இயக்குனர் நெல்சன் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய சில வார்த்தைகள் தான்.

முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குனர்கள் என் கேரியரை உயர்த்தியவர்கள் இப்பொழுது நெல்சன் அந்த பாதையில் இருக்கிறார் என நெல்சனை குறித்து ரஜினி பேசினார். மேலும் இந்த படம் பாட்ஷா மாதிரி இருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் பாட்ஷாவுக்கு மேலே இருக்கும் என்று ரஜினி பேசியதுடன் படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.

சமீபத்தில் படத்தின் ஷோகேஸ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் அதை மாஸாக கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே படைத்த சாதனைகளை உடைத்து புதிய சாதனைகளை ஜெயிலர் ஷோகேஸ் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு மொழியிலும் சிறப்பான நடிகர்களை படத்தில் இணைத்து பான் இந்திய படமாக ஜெயிலர் படத்தை நெல்சன் உருவாக்கியுள்ளார். முத்துவேல் பாண்டியன் என்னும் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்திற்கு யு/ஏ தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

என்னடா ராஜமவுலிக்கு படத்திற்கு வந்த சோதனை! பாகுபலி ஒரு திருட்டு கதையா?

இந்நிலையில் ஆகஸ்ட் 5, 2023 சனிக்கிழமை முதல் ஜெயிலருக்கான முழு அளவிலான இந்திய முன்பதிவுகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் பல இடங்களில் மல்டிபிளக்ஸ் மற்றும் PVR  திரையரங்கில் முதல் 6 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 6 நாட்களுக்கு முன்பதிவு முடிந்து விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் படம் ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 3 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...