ஜெயம் படம் பார்த்துட்டு ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. அப்புறம் தான் சூப்பர் ஸ்டாருக்கு உண்மையே தெரிய வந்துருக்கு..

ஜெயம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி.

இதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், என ஏராளமான திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் முன்னிறுத்திக் கொண்டார் ஜெயம் ரவி. மேலும் அவரது திரைப் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்திருந்தது ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களில் அதிகம் படத்தை அவரது சகோதரரும் இயக்குனருமான ஜெயம் ராஜா தான் தனி ஒருவன் படத்தையும் இயக்கி இருந்தார்.

ஜெயம் ரவியின் அட்டகாசமான நடிப்பு, அரவிந்த் சாமியின் வில்லத்தனம், படத்தின் திரைக்கதை என அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைய அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் தனி ஒருவன் அமைந்திருந்தது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகத்தின் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் ரிலீசான நிலையில் அதற்கு முன்பாக கல்கி எழுதிய உலக புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய படத்திலும் நடித்திருந்தார்.

பல இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க கனவு கண்ட சூழலில், அதில் வெற்றி கண்ட மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இரண்டு பாகங்களாக படத்தை இயக்கினார். இதில், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக சைரன், Thug Life, பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில், அவரது முதல் படமான ஜெயம் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

ஜெயம் ரவியின் தந்தையும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் எடிட்டருமான மோகன், இது பற்றி ஒரு நேர்காணலில் பேசி உள்ளார். “அந்த சமயத்தில் நானும், ரஜினியும் அதிகம் பேசிக் கொள்வோம். அப்படி ஜெயம் படத்தில் First Copy-ஐ நான் பார்க்கப் போகும் தகவல் ரஜினிக்கு எப்படியோ தெரிந்து விட்டது. உடனடியாக என்னுடன் நிச்சயம் படம் பார்க்க வருவதாக கூறிவிட்டு தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வந்து சேர்ந்தார் ரஜினிகாந்த்.

ஜெயம் படத்தின் இடைவேளையில், ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா எனது மகன்கள் என தெரியாமல் பேசிய ரஜினிகாந்த், ‘என்ன சார் புது ஹீரோவுக்கு இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்க’ என கேட்டார். அப்போது நான் அவரிடம் இது புது ஹீரோ இல்ல சார். என்னுடைய இரண்டு மகன்களின் வாழ்க்கை தான் இந்த படம் என கூறியதும் அதன் பின்னர் தான் ரஜினிகாந்த் உண்மையை உணர்ந்து கொண்டார்” என மோகன் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.