கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் வெளியாகி கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் இன்னும் இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட முழுவதும் பார்க்கும் வகையில் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பல பேட்டிகளில் பாட்ஷா படம் வெற்றியடையும் என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் இந்த அளவுக்கு வெற்றி அடையும் என்று நாங்களே கூட எதிர்பார்க்கவில்லை என்று ஆச்சரியத்துடன் கூடியிருப்பார்.

பல கோடி சம்பாதித்த தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஒரு பவுன்சரா? ’ஜெண்டில்மேன்’ உருவான கதை..!

கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இது ரஜினியின் பெஸ்ட் கமர்சியல் படமாகூம். இந்த படத்தின் கதை உருவான விதமே சுவாரசியமானது.

அமிதாப்பச்சன் நடித்த ஹம் என்ற இந்தி படத்தின் தழுவல் தான் பாட்ஷா. ஆனால் அதே நேரத்தில் முதல் பாதியில் ஹீரோ பாட்ஷாவாக இருக்கிறான், அவன் ஒரு கட்டத்தில் தந்தை இறக்கும் தருவாயில் தனது தம்பி, தங்கைகளை காப்பாற்றுவதாக வாக்கு கொடுக்கிறான், அதன் பின் இரண்டாம் பாதியில் சென்னை வந்து தம்பி தங்கைகளை படிக்க வைத்து வேலை வாங்கி கொடுக்கிறான். அப்போது சிறையில் இருந்து வெளியே வரும் வில்லன் நாயகனின் குடும்பத்தை அழிக்க முயல நாயகன் அவரைக் காப்பாற்றுகிறான். இதுதான் அமிதாப்பச்சனின் ஹம் படத்தின் கதை.

ஆனால் சுரேஷ் கிருஷ்ணா அதை அப்படியே மாற்றி முதல் பாதியை இரண்டாம் பாதியாகவும் இரண்டாம் பாதியை முதல் பாதியாகவும் தனது திறமையான திரைக்கதை மூலம் மாற்றினார். அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.

மேலும் தங்கைக்கு மெடிக்கல் சீட்டு வாங்குவதற்காக ரஜினி மெடிக்கல் கல்லூரி முதல்வரிடம் பேசும் போது ‘என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற காட்சி ஹம் படத்தில் இல்லை. அதேபோல் தம்பியின் போலீஸ் வேலைக்காக டிஜிபியை பார்க்க ரஜினி செல்லும் காட்சியும் ஹம் படத்தில் இல்லை. இந்த இரண்டு மாஸ் காட்சிகளும் பாட்ஷா படத்தின் வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

கவுண்டமணியை ஓரங்கட்ட கமல், ரஜினி கொண்டு வந்த காமெடி நடிகர்.. இப்போது அமெரிக்காவில் செட்டில்..!

இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் கதைக்கு தேவையில்லாமல் இருக்காது. ஆரம்பத்தில் ரஜினிக்கான ஆட்டோக்காரன் பாடல் பில்டப், அதனை அடுத்து தம்பி, தங்கைகளின் எமோஷன் காட்சி, சண்டை என்றாலே பயந்து ஒதுங்கும் காட்சி, ஆனந்தராஜ் அவரை ஒரு கம்பத்தில் வைத்து அடிக்கும் போது கூட அமைதியாக இருக்கும் காட்சி, ஜனகராஜ் உட்பட தனது கூட்டாளிகள் பொங்கி எழும்போது கூட அவர்களை அமைதிப்படுத்தும் காட்சி என ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய பின்னணி இருப்பதை அவ்வப்போது திரைக்கதை தெரிவிக்கும்.

அதன் பிறகு ஆனந்தராஜை அடித்து உதைக்கும் காட்சியை அடுத்து தான் அவரது உண்மையான சுயரூபம் தெரியவரும். குறிப்பாக அவர் தனது தங்கையிடம் ‘உள்ளே போ’ என்று கூறும் வசனம் இன்றுவரை பார்க்க பிரமிப்பாக இருக்கும். அதே போல் இடைவேளைக்கு முன்பு, ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்ற மாஸ் வசனம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தது.

தேவாவின் பாடல்களை விட பின்னணி இசையில் பட்டையை கிளப்பி இருப்பார். குறிப்பாக பாட்ஷாவை காண்பிக்கும் போது வரும் பின்னணி இசை ஆச்சரியப்பட வைக்கும். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னணி இசை மிகப்பெரிய ஒரு காரணம்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

தமிழ் திரை உலகில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் பாட்ஷா படத்திற்கு பிறகு இதுவரை வரவில்லை என்பதுதான் இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts