3 காதல் தோல்விகளை கண்ட ரஜினிகாந்த்! ஆன்மிகவாதியாக மாறியது எப்படி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவரின் பணம், புகழ், சூப்பர் ஸ்டார் பட்டம், உலகளவில் பிரபலம்,ராஜா மாதிரி வாழும் வாழ்க்கை என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் மன அமைதியை தேடி இமய மலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளவர் ரஜினி. இது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

ரஜினிகாந்த் படத்தின் ரிலீசிற்கு பின் இமயமலை செல்லும் அளவுக்கு அப்படி என்ன தான் அமைதி தேவைப்படுகிறது என்று நினைத்திருக்கிறோமா?..தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் பாலச்சந்தரை பார்த்து என்னை கண்டிக்கவும், திருத்தவும் உரிமையுள்ள ஒரே இயக்குனர் நீங்கள் தான் என்று நன்றியோடு கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

நிம்மதியான ஒரு கண்டக்டராக இருந்த என்னை நீங்க தானே ரஜினியாக மாற்றினீர்கள். திடீரென வந்த பணம், புகழ், பட்டம் என்னும் ஆடம்பர வாழ்க்கை என்னும் போதையை தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கு இல்லை என ஒரு குழந்தையை போல ரஜினி அவர்கள் இயக்குனர் பாலச்சந்தர் முன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வின் மூலம் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ரஜினியின் இதயம் எவ்வளவு எளிமையானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள முடியும். தனது நடை, உடை, பாவனை ஸ்டைல் மூலம் உலகம் முழுவதும் கோடி கணக்கான தீவிர ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் பல அவமானங்களையும், வலிகளும், வேதனைகளும் கொண்டதாகவே இருந்துள்ளது.

ஐந்து வயதில் தாயை இழந்த ரஜினிகாந்த் படிக்க பணம் இன்றி பெங்களூருவில் கண்டக்டராக வேலை செய்த போது ஒரு பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டது. எல்லோருடைய முதல் காதல் போல் இதுவும் சொல்லாத காதலாகவே மாறிப்போனது. அதற்கு அடுத்து காலம் கடந்தது மீண்டும் புதிய காதல் துளிர்விட்டது. இம்முறை காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியோடு காதலை சொன்ன ரஜினியை கருப்பாக இருப்பதாக கூறி நிராகரித்து விட்டார்.

அந்த பெண் நிராகரிக்கும் வரை நிறம் பற்றி பெரிதாக நினைக்காத ரஜினிகாந்த், அதன் பிறகு உன்னை விட வெள்ளையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன் என்று சபதமிட்டு அந்த சபதத்தில் வெற்றியும் அடைந்து விட்டதாக ஒரு கிசுகிசுவும் உண்டு.

திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26வது வயதில் இயக்குனர் கே பாலச்சந்தரால் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட  ரஜினிகாந்த், பிரபல நடிகையுடன் காதல் வயப்பட்டதாகவும், அந்த நடிகை அப்போது அரசியல் கட்சித் தலைவரும் பிரபல நடிகர் ஆன ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், காதலை அறிந்த அந்த பிரபல நடிகர் ரஜினியை தாக்கியதாகவும் பிறகு இரண்டு மாத காலம் பிரபல மருத்துவமனையில் இயக்குனருக்கு பாலச்சந்தரின் உதவியுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக இனி யாரு நடிக்க போறாங்க தெரியுமா?

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அன்று முதல் ஆன்மீகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். கடவுளின் மேல் அளவுகடந்த பக்தியும் தியானமும் இமயமலையின் அமைதியும் இந்த மாமனிதரின் வலிகளுக்கு அருமருந்தாக அமைவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தோல்வியை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த் எத்திராஜ் கல்லூரியின் மாணவியான லதா ரங்காச்சாரி என்பவரை பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல் விருப்பத்தைச் சொல்லி திருமணத்திற்கும் சம்மதம் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய ரஜினியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இவை இடம் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்தியா டுடே இணையதளத்திலும் வெளிவந்துள்ளது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார், ஸ்போர்ட்ஸ் பத்திரிகையின் மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர் மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என இவ்வளவு பெரிய புகழுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இன்றும் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றும் உயர்ந்த மனிதராகவே வலம் வருகிறார் இந்த தலைவர் ரஜினிகாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...