படப்பிடிப்பு ரத்தானதால் மொட்டை மாடியில் தங்கி, ஆற்றில் குளித்த ரஜினி.. அப்போவே அவ்வளவு எளிமை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாயும் புலி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா அருகே உள்ள கிராமத்தில் நடந்தபோது படப்பிடிப்பு கருவிகளில் ஒன்று திடீரென பழுதானது. இதனை அடுத்து சென்னை சென்று பழுதாகி வரும் வரை ரஜினிகாந்த் அந்த கிராமத்திலேயே தங்கியதாகவும், மொட்டை மாடியில் படுத்து தூங்கி மறுநாள் காலையில் ஆற்றில் குளித்து படப்பிடிப்புக்கு தயாரானதாகவும் இந்த படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் எளிமை குறித்து அவர் அளித்த இந்த பேட்டி இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி, கமல் ஆகிய இருவரையும் வைத்து அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஏவிஎம் புரொடக்சன் நிறுவனம் திரைப்படங்களை தயாரித்து வந்தது. பெரும்பாலும் அந்த படங்களை எஸ்.பி.முத்துராமன்தான் இயக்கி இருந்தார். அந்த வகையில் 1983ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான படம்தான் ‘பாயும் புலி’.

ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!

paayum puli 4

ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர், கே.பாலாஜி, வி.கே.ராமசாமி, மனோரமா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் பிரபல இயக்குனர் திருலோகசந்தரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்தார். இதனை அடுத்து இந்த படத்தின் வில்லனாக கராத்தே மணி நடிக்க ஒப்புக்கொண்டு சில நாட்கள் நடித்த நிலையில் திடீரென அவர் படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்துதான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெய்சங்கர் ஒப்பந்தமானார். அவரும் தனது வில்லத்தனமான நடிப்பால் அசத்தியிருப்பார்.

தனது அப்பாவி தங்கையை வில்லன் குழுவினர் கொலை செய்துவிட்ட நிலையில், தட்டிக் கேட்க முடியாத அப்பாவித்தனமான கேரக்டரில் ரஜினி நடித்திருப்பார். அதன்பின் அவர் தற்காப்பு கலையை முறைப்படி கற்று புதிய ரூபத்தில் வில்லன்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

 

இந்த படம் ஹாலிவுட் படம் ஒன்றின் தழுவலாக இருந்தது என்பதும் ஜாக்கி சான் படம் போன்று தற்காப்பு கலை காட்சிகளை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தில் வைத்திருப்பார் என்பதும் கூடுதல் தகவல்.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

இந்த படம் 1983ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகி தமிழகம் முழுவதும் பல நகரங்களில் 130 நாட்களுக்கு மேல் ஓடியது. அந்த காலத்திலேயே இது இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்தது. இன்றைய தேதியில் அது கிட்டத்தட்ட ரூ.340 கோடிக்கு சமமாகும்.

paayum puli 2

இந்த படத்தை படக்குழுவினர் இலங்கையிலும் வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் டைட்டிலில் புலி என்று இருந்ததால், இந்த படத்தை வெளியிட இலங்கை அரசு அனுமதி மறுத்தது. அதற்கு பின்னர் இந்த படத்தின் டைட்டில் ‘இரும்பு கரங்கள்’ என்று இலங்கைக்காக மட்டும் மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த படத்தை வெளியிட இன்று வரை இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

இந்த படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘பொத்துகிட்டு ஊத்துதடி வானம்’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews