ஜெயிலர் முத்துவேல் பாண்டியனும் கோலமாவு கோகிலாவும் சந்திக்கப் போறாங்களா?.. செம அப்டேட்டா இருக்கே!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணையும் அடுத்த படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் த செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 ரெடியாகுது:

டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளவில் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தின் வெற்றிவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. மேலும் ‘ஜெயிலர் 2’ படம் விரைவில் உருவாகும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. நயன்தாராவை ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா அடுத்து பி. வாசு இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் சந்திரமூகி படத்தில் ஹிரோயினாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு நயன்தாரா மார்க்கெட் உயர்ந்தது. குசேலன், தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நயன்தாரா ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.

மீண்டும் ரஜினிகாந்த் படத்தில் நயன்தாரா?

கடைசியாக பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து பிளக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி’ படத்தின் மூலம் இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை கூறியதாக சர்சைகள் எழும்பிய நிலையில் படம் டிஜிட்டல் தளமான நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் நயன்தாரா மற்றும் அவரது குழுவினர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. நயன்தாரா மன்னிப்பு கடிதத்தைப் பகிர்ந்து கொண்டு சர்ச்சையை முடித்து வைத்தார்.

ஜெயிலர்’ முதல் பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் தனது மகன் சிக்கியதால் மகனை மீட்க முயற்சி செய்வதும் பின் மகனையே கொலை செய்வதும் என மிரட்டியிருந்தார் ரஜினிகாந்த். கோலமாவு கோகிலா படத்தில் நடித்த நயன்தாராவை ஜெயிலர் 2வில் கொண்டு வரப் போகிறார் நெல்சன் என தற்போது கோலிவுட்டே எல்சியூ போல என்சியூ வரப் போகிறதா என பரப்பாகி உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். வேட்டையன் படம் முடிந்து லோகேஷ் கனகராஜ் படம் முடிந்த பின்னர் தான் ஜெயிலர் 2 ஆரம்பிக்கும் என தெரிகிறது. தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட முடியாமல் தவித்து வரும் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பாரா? என்றும் நடித்தால் அவரது மார்க்கெட் மறுபடியும் உயரும் என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.