படத்தின் தலைப்பைக் கேட்ட உடனே ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சூப்பர் ஹிட் படம்

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பிறகு வந்த நடிகர்களில் இன்றும் மாஸ் குறையாமல் தான் நடிகன் என்பதைத் தாண்டி இன்று படங்களில் நடித்து 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் சினிமா ஜாம்பவானாகத் திகழ்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்பவரை அற்புத நடிகராகப் பார்த்தவர்கள் பாட்ஷா படத்திற்குப் பின் அவரை வசூல் நாயகனாகப் பார்க்கத் துவங்கி விட்டனர்.

அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி துவக்கத்தில் மிகவும் சொற்பமாகத்தான் சம்பளம் வாங்கினார். அதன்பின் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த பதினாறு வயதினிலே படத்திற்கு கூட அவரின் வாங்கிய சம்பளம் 3 ஆயிரம்தான். துவக்கத்தில் கிடைக்கும் வேடங்களில், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே ரஜினி நடித்தார். கமலுடன் நடிக்கும் படங்களில் அவருக்கு வில்லனாகவே நடித்தார்.

தலைவரு வேற லெவல்.. வெளியான ‘லால் சலாம்’.. டிரெண்ட் ஆகும் டிவிட்டர் விமர்சனங்கள்

ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய ரஜினிகாந்திற்கு, 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி படம் திருப்புமுனையாக அமைந்தது. முதன்முதலில் ஹீரோவாக நடித்த இத்திரைப்படத்தில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. இவருடன் ஸ்ரீபிரியா ஜோடியாக நடித்திருந்தார். பின்னாளில் இவர்கள் கூட்டணியே அதிக படங்கள் நடித்தனர்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்களுக்கு ரஜினியைப் பிடித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஆடு புலி ஆட்டம் படத்தில் வில்லனாக நடித்த போது கூட ரஜினியை மக்கள் ஹீரோவாகத்தான் பார்த்தனர். அதனால்தான், ரஜினியை ஹீரோவாக போடலாம் என்கிற நம்பிக்கை பைரவி தயாரிப்பாளருக்கு வந்தது.

ரஜினியை அப்படி முதலில் பார்த்த தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் கலைஞானம்தான். அவர் எழுதி, தயாரித்த பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். படம் ஹிட். இந்த படத்தில் நடிப்பது பற்றி கலைஞானம் ரஜினியிடம் பேச சென்றபோது படத்தின் தலைப்பு ‘பைரவி’ என்றார். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. அதற்கு காரணம் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி பேசும் முதல் வசனம் ‘பைரவி வீடு இதானே’ என்பதுதான்.

தன்னை ஹீரோவாக்கி பார்த்த கலைஞானத்திற்கு பின்னாளில் சொந்தமாக வீடு ஒன்றையும் ரஜினி கட்டிகொடுத்து கவுரவித்தார். அதோடு, அவருக்கு பல வகைகளிலும் பண உதவியும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.