அடுத்த மாதம் கட்சி துவக்குகிறாரா ரஜினி

எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் என ஆரம்ப காலத்தில் சொன்னவர் ரஜினி பிறகு கட்சி எல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என சூசகமாக சொன்னார்.


நெய்வேலி, காவேரி பிரச்சினையின் போது உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் போன்ற இவரின் பாடல் காட்சிகளின் வரிகள் அதிக விமர்சனத்திற்குள்ளானது.

96ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, தமாக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார் ரஜினி. ரஜினியின் வாய்ஸ் அந்த நேரத்தில் பெரும் வெற்றியையும் கொடுக்க அந்த நேரத்தில் தவறவில்லை.

இருந்தாலும் ரஜினிகாந்த் கட்சி துவக்க நீண்ட காலம் காலம் தாழ்த்தியே வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கட்சி துவங்குவதாக ரசிகர்கள் சந்திப்பில் சொல்லி இருந்தார்.

தற்போது அதிக அளவிளான பிரஸ் மீட்டுகள் அதன் மூலம் மீடியாக்களின் பேசுபொருளான ரஜினி அடுத்த மாதம் கட்சி துவக்குவார் என தெரிகிறது.

நாளை தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலர்களை இது விஷயமாக சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் வருவதால் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Published by
Staff

Recent Posts