நோ சொன்ன ரஜினி.. விடாப்பிடியாக இளையராஜா வைத்த பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ரகசியம்!

நடிப்புக்கு எப்படி ஓர் சிவாஜி கணேசன், இசைக்கு ஓர் இளையராஜா என்பது போல் ஸ்டைலால் பிரபலாகி இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினி. அடுத்ததாக இவர் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் வெளிவர உள்ளது. மேலும் வேட்டையன் படப்பிடிப்பிலும் மும்முரமாக நடித்து வருகிறார். அன்றிலிருந்து இன்றுவரை சுறுசுறுப்புக்கு பெயர் போன ரஜினி தனது இணை நடிகையான விஜயசாந்திக்கு  தன்னை விட அதிக முன்னுரிமை கொடுத்து வெளிவந்த படம் தான் மன்னன். குஷ்பு, விசு, கவுண்டமணி ஆகியோர் நடித்த இப்படத்தை பி.வாசு இயக்கினார்.

1986-ம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் அகுரஹ அரளிது. இந்த படத்தை பி.வாசு இயக்கத்தில் மன்னன் என்ற பெயரில் வெளியானது.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத பாடல் இன்னும் அன்னையர்களின் தேசிய கீதமாக உள்ளது. வாலி எழுதிய இப்பாடலை யேசுதாஸின் உருக வைக்கும் குரலில் பாட கண்களில் தானாக நீர் ஊற்றெடுக்கும். அதேபோல் ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ நான் இங்கு பாட என்ற பாடலையும் யேசுதாஸ் தான் பாடியிருப்பார். இப்பாடலை இயற்றியது சினேகன்.

ஆனால் இந்த பாடலுக்கான சூழ்நிலை படத்தில் இல்லாத நிலையில், இந்த சூழ்நிலையை உருவாக்கி அதில் இந்த பாடலை வைக்க சொன்னவர் இளையராஜா. அதன்படி இயக்குனர் பி.வாசுவும் அதை செய்துள்ளார். ஆனால் இந்த பாடலை கேட்ட ரஜினிகாந்த், இந்த பாடல் மெதுவாக உள்ளது படத்தில் வரவேற்பை பெறுமா என்று தெரியவில்லை. அதனால் இந்த பாடல் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஒரே ஒரு வார்த்தையால் மொத்தப் பாட்டின் அர்த்தத்தையே மாற்றிய கண்ணதாசன்..

ஆனால் விடாத இளையராஜா இந்த பாடல் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று அவரை சமாதானப்படுத்தி படத்தில் வைத்துள்ளனர். ஆனால் ரஜினி வேண்டாம் என்று சொன்ன அந்த பாட்டு இன்றுவரை காலத்தால் அழியாத ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. மேலும் இப்படத்தில் ரஜினியும் அடிக்குது குளிரு என்ற பாடலைப் பாடி பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இதே போல் பல படங்களில் இளையராஜா செய்த மேஜிக்கால் பாடல்களுக்காகவே படமும் ஹிட் ஆகிய வரலாறு உண்டு. அதற்கு மோகன், ராமராஜன் படங்களே சாட்சி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...