ராஜஸ்தானின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்திய சிஎஸ்கே.. இருப்பினும் டார்கெட் 200க்கும் மேல்..

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 37 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்காக ராஜஸ்தான் அணி கொடுத்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனை அடுத்து அதிரடியாக களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் சென்னை பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டினார். ஜெய்ஸ்வால்  77 ரன்களும், ஜாஸ் பட்லர் 27 ரன்களும் எடுத்தனர்.

csk vs rr2 1இதனை அடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்கியவுடன் தான் ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 13 ஓவர்களில் 125 ரன்கள் இருந்த நிலையில் 225 ரன்களுக்கும் அதிகமாக இலக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர்கள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுடன் பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினர்

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி இறுதியில் 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது சென்னை சூப்பர் கிங்ஸ் பொருத்தவரை தேஷ் பாண்டே இரண்டு விக்கெட்டுக்களையும், தீக்ஷனா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்

இந்த நிலையில் 203 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பலமுறை 200 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...