இசைமேதை கேரக்டரில் நடிக்க மறுத்த ராதிகா.. இன்று வரை மிஸ் செய்துவிட்டோமே என்று வருத்தம்..!

தெலுங்கு திரை உலகில் தரமான படங்களை இயக்கியவர் இயக்குனர் கே. விசுவநாத் என்பதும் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் கவிதை போன்ற இருக்கும் என்பது பலர் அறிந்ததே. அந்த வகையில் கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் ஒன்றுதான் சுவாதி முத்யம்.

கமல்ஹாசன், ராதிகா நடித்த இந்த படம் கடந்த 1988ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அட்டர் பிளாப் ஆன படத்தை மீண்டும் எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட்டாக்கிய விசு.. என்ன படம் தெரியுமா?

இந்த படத்தில் கமல்ஹாசன் மனநிலை குறைந்த ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். இந்த கேரக்டருக்கு கமல்ஹாசனை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார் என்று குறிப்பிடும் வகையில் அவரது நடிப்பு இருக்கும். ஆனால் கமல்ஹாசனை தாண்டி நடிப்பில் ஸ்கோர் செய்தவர் ராதிகா தான்.

சிவாஜி கணேசன் இந்த படத்தை பார்த்து கமலிடம், உன்னை விட ராதிகா நடிப்பில் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று இந்த படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழிலும் பல திரையரங்களில் 100 நாட்கள் ஓடியது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இளையராஜா என்றால் அது மிகையாகாது. வரம் தந்த சாமிக்கு, ராமன் கதை, துள்ளித்துள்ளி போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இந்த படம் சிறந்த தெலுங்கு படம் என்று தேசிய விருதும் பெற்றது.

ரஜினி நடித்த கேரக்டரில் எஸ்.வி.சேகர்.. துணிச்சலாக ரீமேக் செய்த விசு..!

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் ராதிகா நடிப்பு மீது கே.விசுவநாத் அவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. இதனால் இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி கதையை வாழ்க்கை வரலாற்று படமாக்க விரும்பினார். அதற்கான பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார்.

அவர் ராதிகாவுக்கு போன் செய்து எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இயக்கவுள்ளேன். நீதான் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க போகிறாய் என்று கூறினார். பிரகாஷ்ராஜ், மோகன்லால் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

இசைஞானி இளையராஜா தான் இசை என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி கொண்டிருந்த நிலையில்தான் திடீரென ராதிகாவிடமிருந்து போன் வந்தது. என்னால் எம்.எஸ்.சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு இசைமேதையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தவறாக நடித்துவிட்டால் எனக்கு மிகப்பெரிய இழுக்கு வந்துவிடும் எனவே என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்ற கூறினார்.

ராதிகா நடிக்க விட்டால் இந்த படத்தையே நான் எடுக்கப்போவதில்லை என்றும் கே.விசுவநாத் உறுதியாக இருந்தார். அதுபோலவே அவர் அந்த படத்தை எடுக்கவில்லை. சில வருடங்கள் கழித்து கே.விசுவநாத் அவர்களை ராதிகா சந்திக்க சென்றபோது, அவருடைய மனைவி ராதிகாவிடம் எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாயா? நீ நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் அந்த படத்தையே அவர் கைவிட்டு விட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.

கமல்ஹாசன் – சிங்கீதம் சீனிவாசராவ் கூட்டணியில் உருவான 6 படங்கள்.. எத்தனை சூப்பர்ஹிட்?

அதன் பிறகுதான் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருக்கலாமே என்று ராதிகா வருத்தமடைந்தார். ஒரு மிகப்பெரிய இசைமேதையின் கதை, ஒரு மிகப்பெரிய இயக்குனரின் படத்தில் நடிப்பதை மிஸ் செய்து விட்டேன் என்று ராதிகா பல பேட்டிகளில் கூறியுள்ளார். ரசிகர்களும் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை விஸ்வநாத் இயக்கத்தில் பார்ப்பதை மிஸ் செய்து விட்டார்கள்.

Published by
Bala S

Recent Posts