சாம் கர்ரனை மிஸ் செய்த சிஎஸ்கே.. ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்த அணி!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் பிரபல வீரர் சாம் கர்ரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிஸ் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்களை ஏலத்திற்கு வந்தனர். அந்த வகையில் கேன் வில்லியம்ஸ் அடிப்படையான 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர் ஐதராபாத் அணியில் விளையாடி வந்த நிலையில் ரூ.14 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருந்தார் என்பதும் அவர் விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி ப்ரீக்கை ஹைதராபாத் அணி 13.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேபோல் மயங்க் அகர்வாலை சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் ஏலம் எடுக்க கடும் போட்டிகள் இருந்த நிலையில் 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அனேகமாக அவர் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கர்ரன் ஏலத்திற்கு வந்தபோது மும்பை சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் அவரை எடுக்க முயற்சித்தன. ஒருகட்டத்தில் மும்பை விலகிக்கொள்ள சென்னை மற்றும் பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 18.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts