கடைசி ஓவரில் த்ரில் கொடுத்த பஞ்சாப் தோல்வி.. சிஎஸ்கே பிளே ஆப் போவது உறுதியா?

இன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் த்ரில் தோல்வி அடைந்த நிலையில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 33 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. இதனை அடுத்து முதல் நான்கு பந்துகளில் அந்த அணி 17 ரன்களை எடுத்து அடுத்த மூன்று பந்துகளில் 16 ரன்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

மூன்று சிக்சர் அடித்தால் அல்லது இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்த இரண்டு பந்துகளில் ரன் எடுக்க முடியாத பஞ்சாப் அணி கடைசி பந்தில்ஒரு விக்கெட்டையும் பறி கொடுத்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது

இந்த நிலையில் பஞ்சாப் தோல்வியால் சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் சுற்றுக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...