சினிமா பாணியில் நடிகையை கடத்தி திருமணம் செய்த அந்தக் கால சூப்பர் ஸ்டார்.. அப்பவே இப்படியா..!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா என அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏனெனில் தொழில்நுட்பம் வளராத அன்றைய காலகட்டத்தில் இவர்கள் நடித்த படங்கள் எல்லாம் வருடக் கணக்கில் ஓடி சாதனை புரிந்தவை. வசூல் சக்கரவர்த்திகளாகவும் திகழ்ந்தனர்.

இதில் பி.யூ. சின்னப்பா சற்று வித்தியாசமானவர். 15 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய திரைப் பயணத்தை ஆரம்பித்து பின்னாளில் சூப்பர் ஸ்டாராக வெற்றிக் கொடி நாட்டினார்.  பி.யூ.சின்னப்பா 1936-ம் ஆண்டு வெளியான சந்திரகாந்தா என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கி பின் பஞ்சாப் கேசரி, அநாதை பெண், உத்தமபுத்திரன், ஆரியமாலா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்வில் இவரது திருமணம் நடைபெற்ற விதம் சற்று சுவாரஸ்யமானது. அந்தக் காலக்கட்டத்தில் இவருடன் நடித்த நடிகைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி தர வேண்டும் என்று ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட பி.யூ.சின்னப்பா அந்த கட்டுரையை எழுதிக் கொண்டு சென்னை வந்துள்ளார்.

எம்ஜிஆரின் கத்தி சண்டை வியந்து பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! உண்மையை உடைத்த பிரபலம்!

அப்போது அந்தப் பத்திரிக்கை ஆசிரியரிடம் கட்டுரையை கொடுத்த பி.யூ.சின்னப்பா தனது காரில் இருந்த ஒரு பெண்ணை பார்த்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டுள்ளார். நல்லா தெரியுமா நடிகை சகுந்தலா தானே என்று கூறியுள்ளார். ஆமாம் அவர் தான். நான் நடித்த பிரித்விராஜ் திரைப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தில் பிரித்விராஜ் நாயகியை தேரில் கடத்திக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்வார்.

அதேபோல் நான் இவரை காரில் கடத்தி கொண்டுபோய் திருமணம் செய்துகொண்டேன் என்று கூலாகக் கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பத்திரிக்கை ஆசிரியர் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்து வந்தாலும் 1940-களிலே இதை செய்து காட்டியவர் அன்றைய கால சூப்பர் ஸ்டார் பி.யூ சின்னப்பா. இத்தகவலை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Published by
John

Recent Posts